/indian-express-tamil/media/media_files/2025/09/15/download-22-2025-09-15-13-48-44.jpg)
நடன நிகழ்ச்சிகளில் தனது திறமையை நிரூபித்து, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவராக உருவெடுத்தவர் சாண்டி மாஸ்டர். ஆரம்பத்தில் சின்னத்திரை மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், நிகழ்ச்சிகளில் கலக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போது, வெள்ளித்திரையிலும் தனது தனித்துவமான நடனச்செயலாற்றால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார், அதுவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த பாடல் அவரது நடனக்கலையை ஒளிரச் செய்த முக்கிய கட்டமாக அமைந்தது.
இதே நேரத்தில், சாண்டி மாஸ்டர் தனது நடிப்புத்திறமையையும் வளர்த்துவருகிறார். இப்போது மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து, லோகா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இது அவரது நடிப்பு பயணத்தில் ஒரு புதிய திசையைத் திறக்கக்கூடிய வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வுகள் அனைத்தும் அவரை ஒரு பன்முக திறமைசாலியாக உருவாக்கி, தமிழ் மற்றும் பிற மொழி சினிமாவிலும் திகழ வாய்ப்பை உருவாக்கி வருகின்றன.
'பேர் சொல்லும் பிள்ளை' என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் குடும்பத் திரைப்படம் ஆகும். இயக்குனர் எஸ். பி. முத்துராமன் அவர்களின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியாகியது. இதில் கமல் ஹாசன், ராதிகா, கே.ஆர். விஜயா, ரம்யா கிருஷ்ணன், மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டான்ஸ் மாஸ்டர்களே ஆச்சார்யப்படும் எங்கள் டான்ஸ் மாஸ்டர்❤️🔥#KamalHaasan#Vinvelinayagan#Cinematicgenius@iamSandy_Off ❤️😍pic.twitter.com/q79EMQApyD
— Nammavar (@nammavar11) September 14, 2025
இந்த படத்தில் அவரது நடனம் மிகவும் அழகாக இருக்கும் என்று சாண்டி மாஸ்டர் கூறியிருக்கிறார். அதை பற்றி அவர் பேசுகையில், "அந்த படத்தில் வரும் ஒரு பாடலில் ஒரு வித்யாசமான ஸ்டெப் ஆடியிருப்பர். அது மிகவும் கடினமான ஒரு ஸ்டெப் தான். நான் அதை ட்ரை செய்து பார்த்தேன் அனால் எனக்கு வரவில்லை. நான் அவரிடம் கேட்டேன். அவர் உடனே அது டாப் டான்ஸ் கலந்து ஆடினேன் என்று கூறினார். எனக்கு ப்ரம்மிப்பாக போனது. அந்த காலத்திலேயே அவருக்கு டாப் டான்ஸ் எல்லாம் தெரிந்திருந்தது." என்று பகிர்ந்துகொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us