Advertisment

டிச.7ம் தேதி தர்பார் இசை வெளியீட்டு விழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
darbar audio launch Rajinikanth AR Murugadoss dec 7 nehru indoor stadium - தர்பார் இசை வெளியீட்டு விழா டிச.7ம் தேதி நடைபெறும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

darbar audio launch Rajinikanth AR Murugadoss dec 7 nehru indoor stadium - தர்பார் இசை வெளியீட்டு விழா டிச.7ம் தேதி நடைபெறும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Darbar Audio Launch: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார்.

Advertisment

ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த நவ.7ம் தேதி 'சும்மா கிழி' என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரெக்கார்ட் பிரேக் படைத்தது.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

இந்நிலையில், தர்பார் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்வு, டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில், மாலை 5 மணிக்கு தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini Kanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment