Advertisment

தர்பார் பாக்ஸ் ஆபீஸ்: தமிழ் ராக்கர்ஸ் பாச்சா பலிக்குமா?

Darbar tamil movie free download threat by Tamilrockers: புதுப்படங்களை உடனுக்குடன் தனது இணையதளத்தில் பதிவேற்றிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar full movie free download Tamilrockers, Darbar tamil movie Tamilrockers, Darbar tamil movie free download Tamilrockers, தர்பார், தர்பார் பாக்ஸ் ஆபீஸ், தமிழ் ராக்கர்ஸ்

Darbar full movie free download Tamilrockers, Darbar tamil movie Tamilrockers, Darbar tamil movie free download Tamilrockers, தர்பார், தர்பார் பாக்ஸ் ஆபீஸ், தமிழ் ராக்கர்ஸ்

Darbar Tamil Movie vs Tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தால் தர்பார் வசூல் பாதிக்குமா? என்பதை ரஜினி ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் - நிவேதா தாமஸ் செண்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாக இருப்பதால், ஃபேமிலி ஆடியன்ஸை பெரிதும் நம்பியிருக்கிறது தர்பார் டீம்.

Advertisment

ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம், இன்று (ஜனவரி 9) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. லைக்கா தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், நயன்தாரா ஜோடி என ரஜினியைத் தாண்டியும் படத்திற்கு மாஸ் கூட்டுவதற்கான அம்சங்கள் இருக்கின்றன.

Darbar full movie download threat by Tamilrockers: தர்பார் பாக்ஸ் ஆபீஸ் vs தமிழ் ராக்கர்ஸ்

படம் வெளியானதும், முதல்கட்ட ரிவ்வியூக்களில் ஆஹா.. ஓஹோ.. என படத்தை பலர் புகழவில்லை. அதேசமயம், பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறவிதமாக இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம் என்கிற விதமாக கருத்துகள் வருகின்றன.

Darbar Thiruvizha: ரஜினியோட அந்த ஒரு வசனத்துக்கு தியேட்டரே அலறுதுப்பா..!

முதல் பாதி துப்பாக்கி படம் போல விறுவிறுப்பாகவும், 2-ம் பாதி செண்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்திருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்து வெளியிட்டனர். குறிப்பாக ரஜினிகாந்த்- நிவேதா தாமஸ் இடையிலான காட்சிகள் ஃபேமிலி ஆடியன்ஸை கொண்டு வந்து சேர்க்கும் என நம்பிக்கை தெரிவித்தனர் ரசிகர்கள்.

படத்தில் வில்லன் இருக்கிறானோ இல்லையோ, ஒவ்வொரு படத்திற்கும் நிஜ வில்லன் தமிழ் ராக்கர்ஸ்தான். புதுப்படங்களை உடனுக்குடன் தனது இணையதளத்தில் பதிவேற்றிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

சினிமாத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு, தமிழ் ராக்கர்ஸ் இதை செய்து வருகிறது. ரஜினியின் பேட்ட, 2.0 உள்பட முந்தைய எந்தப் படமும் தமிழ் ராக்கர்சுக்கு தப்பவில்லை.

தர்பாருக்கு போட்டியாக பொங்கலுக்கு வேறு படங்கள் களம் இறங்கவில்லை. எனவே படத்தின் வசூல் பிரமாண்டமாக இருக்கும் என சினிமாப் புள்ளிகள் எதிர்பார்க்கிறார்கள். எனினும் தமிழ் ராக்கர்ஸால் தர்பார் படத்தின் வசூல் பாதிக்குமா? என்கிற விவாதமும் இருக்கிறது. இதற்கிடையே படம் வெளியான கொஞ்ச நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தளத்திலும் வெளியாகியது. அங்கும் நிறையப் பேர் பார்த்திருக்கிறார்கள். தர்பாரின் முதல் நாள் வசூல் பல சாதனைகளை முறியடித்தது. இனி வரும் தினங்கள் எல்லாமே பொங்கல் விடுமுறை என்பதால், குடும்பத்துடன் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் ரசிகர்கள்.

படத்தில் நிவேதா தாமஸ், ரஜினி தொடர்பான செண்டிமெண்ட் காட்சிகள்தான் பெரிய பலமாக இருக்கும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்தக் காட்சிகளுக்காக ஃபேமிலி ஆடியன்ஸ் திரள ஆரம்பித்துவிட்டால், தமிழ் ராக்கர்ஸால் படத்தின் வசூல் பாதிக்கப்படாது என்கிறார்கள் அவர்கள்.

தர்பார், பாக்ஸ் ஆபீஸில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறதா? என பார்க்கலாம்.

 

Rajinikanth Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment