தீபாவளி நாளில் குடும்பத்தினர் நினைவு: கண்ணீர் விட்டு கதறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்

ஒரு மாதத்துக்கும் மேலாக, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தீபாவளி நாளில், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறினர்.

விஜய் டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக இன்று (நவம்பர் 4) பிக் பாஸ் 4 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு தங்கள் குடும்பத்தினரை நினைவுபடுத்தியதால் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். இறுதியில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதுவரை அபிஷேக், நாடியா, சின்னப்பொண்ணு ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எளிமினேட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் தீபாவளி பண்டிகையை பிக் பாஸ் வீட்டிலேயே கொண்டாடுகின்றனர்.

பொதுவாக விஜய் டிவியில் தீபாவளி பண்டிகை அன்று இரவு வேறு ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியையே சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று இரவு 4 மணி நேரம் ஒளிபரப்பாகிறது.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி வெளியான புரமோவில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி, குடும்பத்தினரை நினைவூட்டியுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தீபாவளி நாளில், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். இந்த நிகழ்வு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் பிக் பாஸ், போட்டியாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Deepavali special show bigg boss contestant tears in memory of their family members

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com