Advertisment

தற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் மரணம்

சென்னை உட்பட தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கான பயிற்சி முகாம்களை நடத்தியுள்ள இவர் நடிகை அமலா பால் மற்றும் அனுராக் காஷ்யப் போன்ற நடிகர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
தற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் மரணம்

சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி சில்லு கருப்பட்டியில் நடித்த தற்காப்பு கலை ஆசிரியர் மற்றும் நடிகரான ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் இன்று காலமானார். 60 வயதான ஸ்ரீராம் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், வீட்டில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட தற்காப்புக் கலையான கிராவ் மாகாவின் பயிற்சியாளராக இருந்த ஸ்ரீராம் சென்னையில் நன்கு அறியப்பட்ட ஒரு நபராக இருந்துள்ளார்.

Advertisment

மற்றவர்களுடன் அன்பாக பழகும் இவர், பல பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்துள்ளார். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கிராவ் மாகா பயிற்சி முகாம்களை நடத்தியுளார். சென்னை உட்பட தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கான பயிற்சி முகாம்களை நடத்தியுள்ள இவர் நடிகை அமலா பால் மற்றும் அனுராக் காஷ்யப் போன்ற நடிகர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

இவர் கடைசியாக நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி சில்லு கருப்பட்டியில், ஆமை நடை என்ற கதையில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment