Advertisment

96 படத்தில் நீக்கப்பட்ட சூப்பர் காட்சி: பாடகி எஸ்.ஜானகி - திரிஷா சந்திப்பு

Deleted Scene In 96: ஜானகியின் ரசிகையான திரிஷா, ஜானகியின் வீட்டு முன்பு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
veteran singer janaki death rumors, singer janaki

veteran singer janaki death rumors, singer janaki

96 படத்தில் பாடகி எஸ்.ஜானகி - திரிஷா சந்திக்கும் காட்சி படத்தின் நீளம் காரணமாக வெட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்தக் காட்சிகளை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள்.

Advertisment

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 என்கிற தமிழ்ப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் திரிஷாவின் பெயர் ஜானகி. அவரும், விஜய் சேதுபதியும் பிரபல பாடகி எஸ்.ஜானகியை சந்தித்து உரையாடும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, பாடகி ஜானகியின் ரசிகையான திரிஷா, ஜானகியின் வீட்டு முன்பு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார். அந்த நேரம் அங்கு வந்த ஜானகி, திரிஷாவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு அவர்கள் இடையே நிகழும் நெகிழ்ச்சியான சந்திப்பும், உரையாடலும் இந்தக் காட்சிகளில் இருக்கின்றன.

ஆனால் படத்தின் நீளம் கருதி அந்தக் காட்சி வெட்டப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி பட்டையைக் கிளப்பிய நிலையில் படத்தில் இடம்பெறாத அந்த சூப்பர் ஹிட் காட்சியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அந்தக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

Vijay Sethupathi Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment