வெளிநாட்டு காதலர்களுடன் பறக்கும் இந்திய நடிகைகள்!

ஸ்ரேயாவின் திருமணம் தொடங்கி அடுத்து திருமண லிஸ்டில் இருக்கும் பலரின் வாழ்க்கை துணைகளும் வெளிநாட்டவர்கள் தான்

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை திருமணத்திற்கு தயாராகியுள்ள முன்னணி நடிகர், நடிகைகள் பலர் தங்களின் வாழ்க்கை துணையை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் செலட் செய்து வைத்துள்ள பாய் ஃபரண்ட் மற்றும் கேர்ள் ஃப்ரண்ட் லிஸ்டில் அனைவருக்கும் ஒரு பொருத்தம் ஒருசேர அமைந்துள்ளது.

முன்பெல்லாம் டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் தொழிலதிபர்களை காதலித்து மணந்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அவர்கள் மும்பை, பெங்களூர் என் இந்தியாவை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அடுத்த காலக்கட்டத்தில் நடிகர், நடிகைகள் அவர்களின் துறையிலேயே பணிபுரியும் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்களை காதலித்து கரம் பிடித்தனர்.

இதையெல்லாம் தாண்டி தற்போது புது ஃபேஷன் சினிமா பிரபலங்களை மையம் கொண்டுள்ளது. அதுதான் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம். சமீபத்தில் நடைப்பெற்ற ஸ்ரேயாவின் திருமணம் தொடங்கி அடுத்து திருமண லிஸ்டில் இருக்கும் பலரின் வாழ்க்கை துணைகளும் வெளிநாட்டவர்கள் தான்.

கணவர் கொஷீவ் உடன் ஸ்ரேயா

கணவர் கொஷீவ் உடன் ஸ்ரேயா

ஸ்ரேயா சரண்- அந்த்ரேய் கொஷீவ்:

கடந்த மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ஸ்ரேயா சரண்  திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். ஸ்ரேயா திருமணம் செய்துக் கொண்ட  அந்த்ரேய் கொஷீவ்  ரஷ்யாவை சேர்ந்தவர்.  நீண்ட வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இறுதியில் இவர்களின் உறவு திருமணத்தில் முடிந்தது.

காதலர் மைக்கல் உடன் ஸ்ருதி

காதலர் மைக்கல் உடன் ஸ்ருதி

 ஸ்ருதிஷாசன் –  மைக்கல் கார்ஸ்லே :

நடிகரும், மக்கள் மய்யம் இயக்கத்தின் தலைவருமான கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஷாசன்  மைக்கல் கார்ஸ்லே  என்ற இங்கிலாந்து இளைஞரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். விரைவில் பெற்றோரின் சம்மத்துடன் இவர்களின் திருமணமும் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு வயதில் இருந்தே வெளிநாட்டில் வாழ்ந்த இவர், இறுதியில் வெளிநாட்டு காதலரையே மணப்பது எந்தவித ஆச்சரியமும் இல்லை என்கிறனர் சினிமா வட்டாரங்கள்.

டாப்ஸ் – மத்தியாஸ் பாயி: 

தமிழில்  ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி  தெலுங்கு, இந்தியில் டாப் டெண் கதாநாயகிகளில் ஒருவர். இந்தியில் இவர் நடித்த பிங் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.   அதே  போல் தமிழிலும் விரைவில் இவருடைய படங்கள் வெளிவரவுள்ளது. இந்நிலையில் தற்போது டாப்ஸி மத்தியாஸ் பாயி என்ற பாட்மிண்டன் இளைஞருடன் டேட் செய்து வருவதாக அறிவித்தார். அவரும் வெளிநாட்டவரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலர் ஆன்ர்ரூ உடன் இலியானா

காதலர் ஆன்ர்ரூ உடன் இலியானா

இலியானா –  ஆன்ர்ரூ நீபோன்

டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்ட இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ நீபோன் என்ற புகைப்படக் கலைஞரை காதலித்து வருகிறார்.   இடுப்பு அழகி என ரசிகர்களால் ஆசையாக அழைக்கப்படும் இவர்,  விரைவில் தனது காதலரை திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close