Advertisment

அசுரன் செகண்ட் லுக் போஸ்டர்: வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ்!

Dhanush's Asuran 2nd look poster: எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush asuran 2nd look poster

தனுஷின் அசுரன் செகண்ட் லுக் போஸ்டர்

Asuran 2nd Look Poster: ’பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை’ ஆகியப் படங்களுக்குப் பிறகு, 4-வது முறையாக ‘அசுரன்’ படத்தில், இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணி இணைந்திருக்கிறது.

Advertisment

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், பவன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். எழுத்தாளர் பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருகிறது. அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்

’பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன’ ஆகியப் படங்களுக்குப் பிறகு 4-வது முறையாக தனுஷின் படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ’அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அதன் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள 2 போஸ்டர்களில் ஒன்றில் தனித்துவமான ’ரெட்ரோ’ லுக்கும், மற்றொன்றில் கோபமாகவும் காட்சியளிக்கிறார் தனுஷ். இதைப் பார்த்த ரசிகர்களுக்கு புல்லரித்துப் போயிருக்கிறது. அதோடு விரைவில் இதன் ட்ரைலரும், பாடல்களும் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Dhanush Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment