Advertisment

தமிழ் சினிமாவின் புரியாத புதிர் இயக்குனர் ’பாலா’

பாலாவின் பெண் கதாபாத்திரங்கள் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகுவது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ் சினிமாவின் புரியாத புதிர் இயக்குனர் ’பாலா’

பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து வந்த வைரங்களில் பாலாவும் ஒருவர். இயக்குனரான முதல் படத்திலியே தேசிய விருது. அழுக்காக இருப்பவரும் கூட படத்தின் ஹீரோ தான், ஹீரோயின் வெள்ளையா ஸ்லிம்மா இருக்கனும் அவசியம் இல்லை. பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல் இருந்தால் போது அதுவும் ஒன்னு, ரெண்டு தான் என்று தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த பரிமானத்தையும் மாற்றி வேறு உலகத்தை கண்ணில் காட்டியவர் தான் பாலா.

Advertisment

1999 ஆம் ஆண்டு வெளியான சேது படம், தமிழ் சினிமாவிற்கு நடிகர் விக்ரம் கட்டாயம் தேவை என்பதை நிரூப்பித்தது. அடுத்த வந்த நந்தா சூர்யாவை தலையில் தூக்கி கொண்டாட வைத்தது,லவ்வர் பாய் என்ற பெயர் வாங்கிய ஆர்யாவை ’நடிகர் ஆர்யா’ என்று பெயர் போட வைத்தது நான் கடவுள். விஷால் இப்படி கூட நடிப்பாரா? என்று ஊரையே வியந்து பேச வைத்த படம் ’அவன் இவன். நடிகர் அதர்வாவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத மைல்கல் ’பரதேசி’. இப்படி பாலாவின் ஒவ்வொரு படைப்பும் கதை ரீதியாக, நடிப்பு ரீதியாகவும் பிரமிக்க வைத்தாலும் வசூல் ரீதியாக பல விமர்சனங்களை சந்தித்துள்ளது.

publive-image

படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி, ஹிரோ ஹிரோயினுக்கு இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட நெருக்கமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதன் பாதிப்பு நீதிமன்றம் வரை கூட செல்லும். பாலாவின் திரைப்படங்கள் விருதுகளுக்காக எடுக்கப்படுபவை என்ற விமர்சனம் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு. அதே நேரத்தில் அவரின் படங்கள் பெரிய வசூல் சாதனை செய்யாவிட்டாலும் சினிமா ரசிகர்களுக்கு பாலா படங்களின் மீது நல்ல அபிமானமும், மரியாதையும் இருக்கவே செய்கிறது. அப்படி இல்லையென்றால் பாலாவின் படத்தை பார்க்க ரசிகர்கள் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி செல்வார்களா என்ன?

publive-image

தமிழ் சினிமாவில் பாலாவுக்கு தனி இடம் உண்டு. அதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அதேபோல பாலாவின் படங்களுக்கும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு உண்டு. இதை யாரும் சொல்லாமல் தவிர்க்க முடியாது. அதிகப்படியாக பாலா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால் அவர் ஒரு படத்தை எடுக்க பல வருடங்கள் எடுத்துக் கொள்வார், பெண் கதாபாத்திரங்களை படத்தில் இறுதியாக சாவடித்து விடுவார், விளிப்பு நிலை மக்களை பற்றி படத்தில் அதிகம் பேசுவார் என்பது தான்.

publive-image

நிஜ வாழ்க்கையில் பாலா மிகவும் நகைச்சுவையான மனிதர் என்று அவருடன் பணியாற்றிய பல கலைஞர்கள் பகிரிந்துள்ளனர். நாச்சியார் ட் படத்தில் ஜோதிகாவை கெட்ட வார்த்தை பேச வைத்ததில் தொடங்கி, தாரை தப்பட்டையில் வரலட்சுமியை ஆட வைத்தது வரை பாலாவின் பெண் கதாபாத்திரங்கள் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகுவது எப்போதுமே இயல்பு. ஆனால் இறுதியில் அவர்கள் அந்த படத்திற்காக விருது பெரும் போது கூறும் ஒற்றை வார்த்தை “நான் எதுமே பண்ணல.. அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நடிச்சேன்” என்பது தான்.

publive-image

இன்று தனது 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இயக்குனர் பாலாவிற்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் படைப்பில் அடுத்து வெளியாக இருக்கும் அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா பாலாவின் ஒட்டு மொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Bala Todaypk 123movies Fmovies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment