கைவிடப்படும் லோகேஷ் - அமீர் கான் படம்? இதுதான் காரணமா?

நடிகர் அமீர்கானை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அமீர்கானை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
lokesh

கைவிடப்படும் லோகேஷ் - அமீர் கான் படம்? இதுதான் காரணமா?

’மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவரின் முதல் படமே பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ , ‘கைதி’ போன்ற படங்களை இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை பெற்று தந்தது.

Advertisment

அதையடுத்து லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதிலும், கமல்ஹாசன் சண்டைப்போடும் காட்சியில் கேமரா ஆங்கில் பார்ப்பதற்காகவே பலரும் அந்த படத்தை பார்த்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்ததையடுத்து நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், சூர்யா, விஜய் சேதுபதி உட்பட பலருக்கு பரிசுகளை வழங்கினார்.

இதையடுத்து வெளியான ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ‘லியோ’ படத்தின் திரைக்கதை லோகேஷ் கனகராஜ் எழுதியது போன்று இல்லை என்று பலரும் பல கருத்துக்களை தெரிவித்தனர். ஆனாலும் ‘லியோ’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. 

சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது ரசிகர்களின் தாக்கத்தை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். படத்தில் பல இடங்களில் காட்சி பிழை உள்ளது என்றும் இன்னும் திரைக்கதையை வலுவப்படுத்தியிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.

Advertisment
Advertisements

'கூலி’ திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ‘கைதி 2’ திரைபடத்தை இயக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார்.  ஆனால், இதற்கிடையே நடிகர் ரஜினி மற்றும் கமலை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். இதனால் ‘கைதி 2’ திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், ‘கைதி’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அமீர் கானை வைத்து சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருந்தார் லோகேஷ். ஆனால், அந்த கதை தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘கூலி’ திரைப்படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் அமீர் கானை பெரிதாக லோகேஷ் யூஸ் பண்ணவில்லை. இது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாக மாறியது.

’என்ன அமீர்கான் பீடிக்காக வந்தாரா?’ என்று பலர் கிண்டல் செய்து பதிவிட்டு வந்தனர். இதன் காரணமாகவே அமீர்கான், இயக்குநர் லோகேஷின் கதையை நிராகரித்ததாக  சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Lokesh Kanagaraj Aamir Khan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: