‘புத்தன் பிறந்தான்’: பா.ரஞ்சித்- அனிதா ரஞ்சித் செம ஹேப்பி!

புத்தரின் பெயரையும், ஒளியையும் அர்த்தமாகக் கொண்ட ‘மிளிரன்’ என்றப் பெயரை குழந்தைக்கு சூட்டியிருக்கிறார்கள்.   

By: Updated: March 19, 2020, 11:56:01 AM

Pa.Ranjith Blessed with 2nd Baby : தனது முதல் படமான ‘அட்டக்கத்தி’யிலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். அடுத்ததாக அவர் இயக்கிய ‘மெட்ராஸ்’, ’கபாலி’, ‘காலா’ ஆகியப் படங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான குரலாக ஒலித்தன. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான அரசியலை மையப்படுத்திய படங்களை எடுத்த, அவர்களின் வாழ்வியலை மிக இயல்பாக திரையில் காட்டியிருந்தார்.

பெண்ணுடன் பேசுவதில் ஏற்பட்ட மோதல் : உயிரைப் பறித்த டிக் டாக் வீடியோ

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ரஞ்சித். இவர்களுக்கு மகிழினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த ஸ்டார் தம்பதிக்கு மகன் பிறந்திருக்கிறார். புத்தரின் பெயரையும், ஒளியையும் அர்த்தமாகக் கொண்ட ‘மிளிரன்’ என்றப் பெயரை குழந்தைக்கு சூட்டியிருக்கிறார்கள்.

இன்றைய செய்திகள் Live : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 169 ஆக உயர்வு

ரஞ்சித் அடுத்ததாக ஆர்யா, கலையரசன், துஷாரா மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோரை வைத்து ’சல்பேட்டா பரம்பரை’ என்ற படத்தை இயக்குகிறார். இருப்பினும் இதன் டைட்டில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படம் வட சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களைப் பற்றியது. தவிர, ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகியப் படங்களையும் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார் ரஞ்சித்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Director pa ranjith wife anitha blessed with boy baby miliran

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X