இயக்குநர் சேரன் போட்ட சபதம்

முதலில் சம்மதித்த நடிகர் பின்னர் ஆர்வம் காட்டவில்லையாம்.

ராஜிவ்காந்தி

இயக்குநர் சேரன் ரீ எண்ட்ரிக்கு விக்ரமை நம்பியிருந்தார். அவரும் இப்போது கைவிட்டுவிட்டார். இதையடுத்து, புதுமுகங்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார், சேரன்.

தேசிய விருதுகளை அடுத்தடுத்த படங்களில் வாங்கிய, சேரன் கடைசியாக இயக்கிய நான்கு படங்கள் ஓடவில்லை. விமர்சனங்களும் இல்லை. குடும்பத்திலும் பல பிரச்னைகள். வீடுகளுக்கே நேரடியாக சிடி ரிலீஸ் செய்யும் நிறுவனம் தொடங்கி அதிலும் ஏகப்பட்ட நஷ்டம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றனர். இப்படி அடிமேல் அடி வாங்கி சும்மா இருந்த இயக்குநரை நடிகர் விகரம் அழைத்து கதை கேட்டதாகவும் கால்ஷீட் தருவதாக வாக்குறுதி தந்ததாகவும் செய்திகள் வந்தன.

இந்த செய்தி வந்து நான்கு மாதங்கள் ஆகின. விசாரித்தால் இதுவும் காலை வாரிவிட்டதாக செய்தி வருகிறது. முதலில் சம்மதித்த நடிகர் பின்னர் ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் கடுப்பான இயக்குநர் புதுமுகங்களை வைத்து ஒரு ஹிட் கொடுத்துவிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சவால் விட்டு கதை தயார் செய்துகொண்டிருக்கிறாராம்.

சபதத்தில் வெல்லட்டும்!

×Close
×Close