வருகிறதா மங்காத்தா 2..? வெங்கட் பிரபு சொன்ன வார்த்தையால் அதிர்ந்த அரங்கம்

தல அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க திட்டம் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2௦11 ஆம் ஆண்டு நடிகர் தல அஜித் அவர்களை வைத்து முதல் முறை இயக்கிய திரைப்படம் “மங்காத்தா”. ரசிகர்கள் திரையரங்கங்களில் நமது தலையை கொண்டாடி தீர்த்ததை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, யுவன்ஷங்கர் ராஜா இசையில் “பில்லா” படத்தை தொடர்ந்து இந்த மங்காத்தா படத்தின் […]

mankatha 2 venkat prabhu, இயக்குநர் வெங்கட் பிரபு
mankatha 2 venkat prabhu, இயக்குநர் வெங்கட் பிரபு

தல அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க திட்டம் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2௦11 ஆம் ஆண்டு நடிகர் தல அஜித் அவர்களை வைத்து முதல் முறை இயக்கிய திரைப்படம் “மங்காத்தா”. ரசிகர்கள் திரையரங்கங்களில் நமது தலையை கொண்டாடி தீர்த்ததை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, யுவன்ஷங்கர் ராஜா இசையில் “பில்லா” படத்தை தொடர்ந்து இந்த மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் மிகவும் பிரபலமானது.

இயக்குநர் வெங்கட் பிரபு – அஜித் கூட்டணியில் மங்காத்தா 2?

படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சநிலைக்கு கொண்டு சென்றிருந்தார் தல அஜித் குமார் அவர்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தின் இரண்டாம் பாகம் தொடக்கத்திற்கான ஆரம்ப புள்ளியுடன் முடித்திருப்பார் வெங்கட் பிரபு. அன்றில் இருந்தே படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு நிகழ்ச்சி ஒன்றில் நிச்சயம் அஜித்துடன் இன்னொரு படம் இருக்கு. ஆனால் அது மங்காத்தா 2 தானா? என்பது தெரியாது. நிச்சயம் மீண்டும் இணைவோம் என கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Director venkat prabhu statement

Next Story
விஜய்யுடன் இணையும் கப்பீஸ்… பட்டையை கிளப்ப இருக்கும் தளபதி 63kabish poovaiyar, கப்பீஸ் பூவையார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com