Advertisment

அடடே... அமெரிக்காவில் விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு வரவேற்பா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vignesh shivan, விக்னேஷ் சிவன்

vignesh shivan, விக்னேஷ் சிவன்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ்-க்கு சென்ற விக்னேஷ் சிவன் பின்னர் லாஸ் ஏன்ஜலெஸ் சென்றபோது அவருக்கு கிடைத்த வரவேற்பு அவரையே ஷாக் அடைய வைத்திருக்கிறது.

Advertisment

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என மூன்று ஹிட் படங்களின் இயக்குநர் தான் விக்னேஷ் சிவன். இவர் சிவி மற்றும் வேலையில்லா பட்டதாரி படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இவருக்கும் நயன்தாராவிற்கும் இடையே நட்பு மலர்ந்து, பின்வரும் நாட்களில் காதல் மலர்ந்தது.

அமெரிக்காவில் விக்னேஷ் சிவன்

அதன் பின்னர் படங்கள் முடித்து ரிலாக்ஸ் செய்ய வேண்டுமென்றால், நயன் - விக்கி ஜோடி அமெரிக்காவிற்கு பறந்து செல்வதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். 2019ம் ஆண்டின் புத்தாண்டிற்கும் இருவரும் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரத்திற்கு கொண்டாடச் சென்றனர்.

கொண்டாட்டம் முடித்து இன்னும் இருவரும் சென்னை திரும்பாத நிலையில், ஒவ்வொரு ஊராக சுற்றிப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், லாஸ் ஏன்ஜலஸ் சென்ற விக்னேஷ் சிவனை வரவேற்க, அங்கு ஒருவர் காத்திருந்தார்.

don wikki, vignesh shivan, விக்னேஷ் சிவன்

அவர் கையில், “டான் விக்கி” என்ற போர்டை வைத்திருந்தார். இதை பார்த்த விக்னேஷ்,  “என்னை வரவேற்க இப்படி தான் ஒருவர் காத்திருந்தார்” எனத் தெரிவித்திருந்தார். நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்றிருந்த “நீங்க டா..ன் சார் நான் டான் சார்” வசனத்தை நினைவுப்படுத்தியிருக்கிறார் அந்த மனிதர்.

Tamil Cinema Social Media Viral Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment