Advertisment

விஜய்சேதுபதியின் புதிய ஸ்கெட்ச்!

சிம்பு நடித்த ‘வாலு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி

இயக்குனர் விஜயசந்தர் அடுத்ததாக, விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisment

சிம்பு நடித்த ‘வாலு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தர். இந்தப் படத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருந்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு இப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது.

இதைத் தொடர்ந்து விக்ரமை வைத்து 'ஸ்கெட்ச்' படத்தை இயக்கினார் விஜய் சந்தர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படம், இந்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸானது.

இந்நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக ட்விட்டரில் விஜய் சந்தர் அறிவித்துள்ளார். இப்படத்தை விஜய வாகிணி ஸ்டுடியோ தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சீதக்காதி’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இதுதவிர, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ என்ற சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment