ஈரமான ரோஜாவே: மலரின் குடும்பம் அந்த அவமானத்தில் இருந்து மீண்டு வருமா?

Eeramana Rojave: இதற்கு இடையே, ஒரு பணப் பிரச்சனையில், ஹீரோயின் மலர் குடும்பம் மிக மோசமாக அவமானப்படுத்தப்படுகிறது. மலர் வீடே துக்க வீடு போல கிடக்கிறது.

By: Updated: August 19, 2019, 11:29:27 AM

Eeramana Rojave: ஈரமான ரோஜாவே சீரியலின் ஆடியன்ஸ் லெவல் வர வர அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றால் மிகையல்ல. மற்ற சில விஜய் டிவியின் சீரியல்களின் ரேட்டிங்கை ஓவர் டேக் செய்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் ஹீரோயின் மலர். அவரது தங்கையும் அதே வீட்டுக்கு மருமகளாக வருகிறார். இருவருமே இக்கட்டான சூழலில் அந்த வீட்டுக்கு திருமணமாகி வருகிறார்கள். ஆனால், வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீட்டுக்கு வந்த மருமகள்களை, பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். இதற்கிடையே, ஒரு பணப் பிரச்சனையில், ஹீரோயின் மலர் குடும்பம் மிக மோசமாக அவமானப்படுத்தப்படுகிறது. வீடே துக்க வீடு போல காட்சியளிக்க, ‘பேசாமல் விஷத்தை சாப்பிட்டு செத்து போயிடலாம்னு’ பாட்டி சொல்ல, மலரின் அப்பா ‘நான் கடனாதான் கேட்டேன்… இப்படி வீட்டுக்கு தெரியாம குடுத்து, அவங்க நம்மை அவமானப் படுத்திட்டாங்களேன்’னு அழறார்.

அரவிந்துடன் விவாகரத்து: இன்னொரு திருமணம் செய்துக் கொள்கிறாரா தாமரை?

பெண்கள் இப்படியும் பெண்கள் இப்படியும் இருப்பார்களா என்று நினைப்பது போல வெற்றியை காதலிச்ச அஞ்சலி, இன்னும் வெற்றியை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். வெற்றிக்கு தான் மலரை திரும்ப செய்து வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், மலரை எப்போதும் கொடுமைப்படுத்தும் திருமணம் ஆகாத அந்த நாத்தனார், அஞ்சலிக்கு போன் செய்து, ‘அஞ்சலி உன் ஆசை சீக்கிரம் நிறைவேறும். மலரை அவ வீட்டுக்கு அனுப்பியாச்சு. இனி அவ்ளோ பணத்தை அவங்க அப்பனால புரட்ட முடியாது’ என்று சொல்கிறார்.

இதனால், மலரின் குடும்பம் என்னவாகப் போகிறது என்று ஒட்டுமொத்த ஆடியன்ஸும் எதிர்பார்த்துக் காத்திருக்க, நாளை மதியம் 2.30 மணிக்கு அடுத்த எபிசோடுக்கு தயாராகிறது ஈரமான ரோஜாவே.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Eeramana rojave serial vijay tv timing eeramana rojave heroine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X