— MALAYSIA THALA AJITH FAN CLUB ® ???????????????????????????????????? (@Thalafansml) November 5, 2020
காரணம் என்னவென்று விசாரித்ததில், வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி IPS என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ’நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக ’வலிமை’ உருவாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இதில் அதிரடி சண்டைக் காட்சிகளும், பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இருப்பதாக முன்பே தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி என்றும், அவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்றும் வெளியான தகவலை அடுத்து, ரசிகர்கள் இதனை #ஈஸ்வரமூர்த்திIPS என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”