Advertisment

PM Narendra Modi Biopic: மோடியின் பயோபிக் படத்துக்கு தடை!

மோடி பயோபிக்கிற்கு தடை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election Commission Banned PM Narendra Modi Movie

Election Commission Banned PM Narendra Modi Movie

PM Narendra Modi Biopic: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பி.எம்.நரேந்திர மோடி என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது.

Advertisment

இதனை இயக்குநர் ஓமங் குமார் இயக்கியுள்ளார். படத்தில் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

லெஜண்ட் குளோபல் ஸ்டுடியோ மற்றும் ஆனந்த் பண்டிட் மோசன் பிக்சர்ஸ் சார்பில் சுரேஷ் ஓபராய், சந்தீப் சிங் ஆகியோர் இதனை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பொம்மன் இரானி ரத்தன் டாடாவாகவும், மனோஜ் ஜோஷி அமித்ஷாவாகவும், கிஷோரி ஷகானே இந்திரா காந்தியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் கடந்த 5-ம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியாகக் கூடாது என எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. பின்னர் அந்தப் படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்துக் கட்ட தேர்தலும் முடியும் வரை பி.எம்.நரேந்திர மோடி படம் வெளியாகக் கூடாதென, தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Narendra Modi Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment