Advertisment

Enai Nokki Payum Thotta: ’இவ்வளவு நாள் காத்திருப்பு வீணாகவில்லை’, பாராட்டு மழையில் எனை நோக்கி பாயும் தோட்டா

ENPT tamil movie : 2013-ல் இந்தக் கதையை நடிகர் சூர்யாவிடம் கூறினார் இயக்குநர் கெளதம் மேனன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ENPT Reactions

ENPT Reactions

Enai Noki Paayum Thota Review, Celebrities Reactions: ரொம்ப நாட்களாக தயாரிப்பில் இருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.

Advertisment

2013-ல் இந்தக் கதையை நடிகர் சூர்யாவிடம் கூறினார் இயக்குநர் கெளதம் மேனன். ஆனால் அவர் சொன்ன மற்றொரு கதையான ’துருவ நட்சத்திரம்’ சூர்யாவுக்குப் பிடித்துவிட, எனை நோக்கி பாயும் தோட்டாவை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் சூர்யாவின் துருவ நட்சத்திரம் படம் கைவிடப்பட்டது தனிக்கதை. 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2016-ல் தனுஷை வைத்து, எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார் கெளதம் மேனன். ஹீரோயினான மேகா ஆகாஷுக்கு இது தான் முதல் தமிழ் படம். ஆனால் அதன் பின்னர் மேகா நடித்த ‘பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன்’ ஆகிய படங்கள் 2019, பொங்கலுக்கு வெளியாகின.

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

2016, நவம்பர் 27-ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, தனுஷ் - கெளதம் மேனன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2016, ஜனவரி 31-ல் மறுவார்த்தை பேசாதே பாடல் டீசர் வெளியாகி, பெரும் வைரலானது. யாரிந்த படத்தின் இசையமைப்பாளர் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டது. ஆனால், படக்குழுவோ ‘மிஸ்டர் எக்ஸ்’ என இசையமைப்பாளர் பற்றிய தகவலை வெளியிடாமல் வைத்திருந்தது. இதற்கான விடை அக்டோபர், 2017-ல் கிடைத்தது. இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையில் அடுத்தடுத்து வெளியான, ‘நான் பிழைப்பேனோ, விசிறி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் மேலும் வரவேற்பைப் பெற்றன.

ஆனால் எனை நோக்கி பாயும் தோட்டா படம் மட்டும் வெளியாகாமல் இருந்தது. அப்போது வெளியாகி விடும், இப்போது வெளியாகி விடும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். பின்னர் இறுதியாக செப்டம்பர் 5, 2019-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி பிரச்னையின் காரணமாக, அப்போதும் தள்ளிப் போனது. இனி இந்தப் படம் வெளியாகுமா இல்லை அவ்வளவு தானா என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, இன்று (நவம்பர் 29, 2019) வெற்றிகரமாக வெளியாகியிருக்கிறது.

பல தடைகளைக் கடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்திற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்...

'விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்திற்குப் பிறகு, நான் காத்துக் கொண்டிருந்த படம், இது தான். தனுஷின் பின்னணி குரலில் படம் வேற லெவலில் இருக்கும் என இயக்குநர் ரத்ன குமார் தெரிவித்துள்ளார்.

’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் நடிகர் விக்ரம் பிரபு, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லாவிட்டால், இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்காது என்றும், பெரிய இதயமும், தைரியமும் கொண்ட மனிதரை இன்று நான் பார்த்தேன் எனவும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

40-களின் பிற்பாதி வயதில் சிவசாமியாக அனைவரையும் கவர்ந்தார் தனுஷ். இப்போது 25 வயது ரகுவாக கலக்கியிருக்கிறார் என கெளஷிக் தெரிவித்திருக்கிறார்.

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் முதல் பாதி ரொமாண்டிக்காகவும், இரண்டாம் பாதி த்ரில்லராகவும், முழுக்க முழுக்க கெளதம் மேனன் ஸ்டைலில் இருப்பதாகவும் இந்த பயனர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் - மேகா ஆகாஷின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Dhanush Gautham Menon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment