யூடியுப் டிரெண்டிங்; அஷ்வின் நடிப்பில், அறிவு வரிகளில், அனிரூத் குரலில் கியூட் பொண்ணு பாடல்!

அஷ்வின் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் கியூட் பொண்ணு பாடல் யூடியுபில் டிரெண்டிங்காக உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கூக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின் குமார். அதில் தனது அபாரமான சமையல் திறமை மூலம் இறுதி சுற்று வரை வந்தார். ஆனால் அதில் இவரின் சமையலைவிட, அதிகம் வைரலானது ஷிவாங்கி இவரிடம் செய்த குறும்புகள் தான்.

எப்போதும் கூலாக இருக்கும் அஷ்வின் போட்டி ஆரம்பித்து விட்டால் சீரியஸாகி விடுவார். அதிலும் ஷிவாங்கி இவருடன் ஜோடி சேரும் போதெல்லாம் அஷ்வின் ஒருவழியாக ஆகிவிடுவார். சமையல் வேலைகளை ஒழுங்காக செய்யாமல் இருப்பது, போட்டியின்போது விளையாடுவது, ஒருவேளை அஷ்வினுடன் வேறு யாராவது ஜோடி சேர்ந்து விட்டால் கடுப்பாவது என ஷிவாங்கி என்ன செய்தாலும் அது சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

அஷ்வினே என்னும் தன்னுடைய கூக்குரலில் ஷிவாங்கி விளையாட்டாக அழைத்ததுக் கூட அஷ்வினின் டிரேட்மார்க் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அஷ்வின் பிரபலமானதற்கு ஷிவாங்கியும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

இப்படி அஷ்வின் கூக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி வரை வந்தாலும் அவர் போட்டியில் வெல்லவில்லை. ஆனால் ஆல்பம் சாங்ஸ், சினிமா என மிகவும் பிஸியாகி விட்டார். குட்டி பட்டாஸ், அடிப்போலி, யாத்தி யாத்தி என வரிசையாக இவர் நடித்த அனைத்து ஆல்பம் பாடல்களும் பயங்கர ஹிட்.

தற்போது அஷ்வின் என்ன சொல்ல போகிறாய் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவந்திகா, தேஜூ அஷ்வினி மற்றும் புகழ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஹரிஹரன் இயக்குகிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் – மெர்வின் ஆகியோர் படத்துக்கு இசையமைக்கின்றனர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது கியூச் பொண்ணு என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் அறிவின் வரிகளில் விவேக்- மெர்வின் இசையமைப்பில், உருவான இந்த பாடலை அனிரூத் மற்றும் விவேக் சிவா இணைந்து பாடியுள்ளனர். நவம்பர் 20ஆம் தேதி வெளியான இந்த பாடல், 26 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளுடன் தற்போது யூடியுபில் டிரெண்டாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Enna solla pogirai movie cute ponnu song viral on social media

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com