Advertisment

'கனவில் கூட நினைத்துப் பார்க்காத நிஜம்' சுந்தரி சீரியல் நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு!

Serial Actress Gabriella Sellus with Isaipuyal AR Rahman Photo goes viral Tamil News: நடிகை 'கேப்ரியல்லா செல்லஸ்' இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Entertainment Tamil News: Serial Actress Gabriella Sellus with Isaipuyal AR Rahman Photo goes viral

Entertainment Tamil News: சன் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது. கருப்பாக உள்ள சுந்தரியை மையமாக கொண்டு கதைமைக்கப்பட்ட இந்த சீரியலில் நடிகை 'கேப்ரியல்லா செல்லஸ்' நடித்து வருகிறார்.

Advertisment

கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த நடிகை நயன்தாராவின் "ஐரா" திரைப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகை கேப்ரியல்லா. தற்போது சீரியலில் பிசியாக இருக்கும் இவர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கேப்ரியல்லா, "நான் கனவில் கூட நினைத்து பார்க்காத நிஜம் நடந்தது. ரொம்ப நன்றி ஏ.ஆர்.ரஹ்மான் சார். இது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இறைவனுக்கு நன்றி" என்றுள்ளார்.

'முப்பில்லா தமிழே தாயே'(Moopilla Thamizhe Thaaye) என்ற பாடலுக்காக தன்னுடன் கேப்ரியல்லா பணியாற்றியுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

A R Rahman Gabriella Sellus Sundari Serial Gabrella Sun Tv Serial Sundari Serial Actress Gabriella
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment