பண்டிகை நாட்களை குறி வைத்த ஜீ தமிழ் : ஒரே நேரத்தில் 3 ஷோ அறிவிப்பு

Triple Bonanza for viewers; Aa Zee Tamil announces the launch of Junior Super Stars-S4, Rajini and Vidya No 1 during this festive season Tamil News: பண்டிகை நாட்களை முன்னிட்டு ஜீ தமிழ் டிவி ரஜினி, மற்றும் வித்யா நம்பர் 1 என 2 சீரியல்களையும், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 ரியாலிட்டி நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

Entertainment Tamil News: Zee Tamil announces the launch of three shows in this festive season

Entertainment Tamil News: சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வருகிறது ஜீ தமிழ். அந்த வகையில், இந்த கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பண்டிகைக்காலத்தில், ஜீ தமிழ் நேயர்களுக்கு போனாஸ் விருந்தாக ரஜினி, மற்றும் வித்யா நம்பர் 1 என்கிற 2 சீரியல்களையும், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 ரியாலிட்டி நிகழ்ச்சியையும் துவங்குவதாக அறிவித்துள்ளது

ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4

இதன்படி, டிசம்பர் 26 ஞாயிறு அன்று மாலை 6:30 மணிக்கு குழந்தைகளின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கீகீ விஜய் தொகுத்து வழங்குகிறார். விஜே கல்யாணி மற்றும் அமுதவாணன் இந்த சீஸனின் வழிகாட்டி நிபுணர்களாகச் செயல்படுகிறார்கள். புன்னகை அரசி சினேகா, மிர்ச்சி செந்தில் மற்றும் பிக்பாஸ் சம்யுக்தா நிகச்சியின் நடுவர்களாக கலந்து கொள்கின்றனர்.

2 புதிய சீரியல்கள்

இதனைத் தொடர்ந்து, மாறுபட்ட ஆனால் நம் வாழ்க்கையோடு தொடர்புடைய இரண்டு குடும்ப சீரியல்களையும் துவங்க உள்ளது ஜீ தமிழ். இதில் ரஜினி சீரியல் டிசம்பர் 27ம் தேதியும் திங்கள்கிழமை இரவு 9:30 மணி முதல் ஒளிபரப்பாகிறது. ஆசைகளைக் காட்டிலும்
தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும், அறிவுக்கூர்மையும், துணிச்சலும் மிக்க ஒருபெண்ணின் வாழ்க்கை தான் இந்த சீரியலின் மையக் கதை.

தைரியமும், அழகும் நிறைந்த ரஜினி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா அஞ்சன் நடிக்கிறார். யாழினி (ரஜினியின் உயிர்த்தோழி), அருண் (அனிதாவின்தம்பி), பார்த்திபன், நடிகை ஸ்ரீலேகாதாயாக, சுபிக்ஷா, ப்ரீத்தா சுரேஷ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மற்றொரு புதிய வரவான ‘வித்யா நம்பர் 1’ சீரியலும் டிசம்பர் 27 முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியல் இரக்ககுணம்மிகுந்த கிராமத்துப் பெண்ணான வித்யாவின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது.

நடிகை நிஹாரிகா, இளம் நட்சத்திரம் தேஜஸ்வின யூடியூப் பிரபலம் இனியன், சஞ்சய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Entertainment tamil news zee tamil announces the launch of three shows in this festive season

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com