பிரபல மலையாள, தமிழ் நடிகை மிருதுளா விஜய் மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகர் யுவகிருஷ்ணா என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
ஜெனிபர் கருப்பையா(2016 ), கடன் அன்பை முறிக்கும், நூறாம் நாள் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மிருதுளா விஜய். தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். மலையாளத்தில் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன், நெக்ஸ்ட் டோக்கன் நம்பர் பிளீஸ், இன்பினிட்டி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
இந்நிலையில், மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகர் யுவகிருஷ்ணா என்பவரை மிருதுளா விஜய் விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் நடந்தது. திருமணத் தேதி விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
மிருதுளா விஜய் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டார். அவரின் ரசிகர்கள், தங்கள் வாழ்த்துக்கள் பதிவு செய்து வருகின்றனர்.