Advertisment

Bharathi Kannamma Serial: வில்லி வெண்பா ரோல் அவ்வளவுதானா? புஷ்பா சொன்ன சீக்ரெட்

Farina quits from BharathiKannamma serial: பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெண்பா விலகல்; வேலைக்காரியாக நடித்து வரும் புஷ்பா சொன்ன புதிய தகவல்

author-image
WebDesk
New Update
Bharathi Kannamma Serial: வில்லி வெண்பா ரோல் அவ்வளவுதானா? புஷ்பா சொன்ன சீக்ரெட்

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வில்லி வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் 600 எபிஷோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முன்னிலையில் உள்ளது.

இந்த சீரியலில் அருண், ரோஷினி ஹரிப்பிரியன், ஸ்வீட்டி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் வில்லி வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரீனா. இவருக்கு இந்த கேரக்டர் மூலம் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர் உள்ளன.

publive-image

இந்த நிலையில், நிஜ வாழ்க்கையில் ஃபரீனா கர்ப்பமானார். இதனால் அவர் சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் ஃபரீனா அதனை மறுத்து, வெண்பாவாக நானே தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்தார். தற்போது வரை வெண்பாவாக அவரே நடித்து வந்தார். இந்தநிலையில், அவரது பிரசவத்தைக் கருத்தில் கொண்டு, வெண்பா சிறைக்கு செல்வது போல் கதை அமைக்கப்பட்டது.

publive-image

இந்த நிலையில் சீரியலில் இருந்து ஃபரீனா விலகியுள்ளதாக, வேலைக்காரி கேரக்டரில் நடிக்கும் புஷ்பா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, மிஸ் யூ ஃபரீனா என குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையில் ஃபரீனா சீரியலில் இருந்து விலகி விட்டாரா என தெரியவில்லை. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Farina Azad Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment