ஸ்ரீரெட்டியின் போராட்டம் ஓய்ந்ததா??? தடையை நீக்கியது தெலுங்கு நடிகர் சங்கம்!!!

ஸ்ரீ ரெட்டி லீக்ஸ்’ என்ற பெயரில் சில புகைப்படங்கள், வாட்ஸ் அப் போட்டோக்கள் வெளிவந்தன.

அரை நிர்வாண போராட்டம் நடத்தி தெலுங்கு திரைத் துறையினரை அதிர வைத்த நடிகை ஸ்ரீரெட்டி மீதான தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கியது.

கடந்த சில வாரங்களாக தெலுங்கு மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகவும் பேசப்பட்ட நடிகையாக மாறியவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர், கடந்த சனிக்கிழமை அன்று, ஹைதாராபத்தில் உள்ள தெலுங்கு ஃபிலிம்சேம்பர் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டத்திற்கு பின்பு, பல பகீர் உண்மைகள் மறைந்திருந்தனர். அதன் பின்பு, ஒட்டு மொத்த ஊடகங்களின் கவனமும் ஸ்ரீ ரெட்டியின் பக்க திரும்பியது. இதுக் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர்,பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,அரசுக்கு சொந்தமான ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று என்னை பாலியல் வன்கொடுமை செய்தாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும், தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ரகசிய வீடியோக்கள், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் சுச்சி லீஸ் போல் தெலுங்கில் ’ஸ்ரீ ரெட்டி லீக்ஸ்’ என்ற பெயரில் சில புகைப்படங்கள், வாட்ஸ் அப் போட்டோக்கள் வெளிவந்தன.

அதில், பிரபல இயக்குனர் சேகர் கம்முலு , தெலுங்கு முன்ணனி நடிகர்கள், நடிகர் ராணாவின் தம்பி ஆகியோருடன் ஸ்ரீரெட்டி எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதற்குச் சம்பந்தப்பட்ட திரையுலகினர் உட்பட பல்வேறு தெலுங்கு திரையுலக அமைப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு, ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.ஸ்ரீரெட்டி நடிப்பதற்கான அங்கீகார அட்டையும் ரத்து செய்யப்பட்டது.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ஸ்ரீரெட்டி அதற்கு பின்பு, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இந்த விவகாரம் தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி தெலங்கானா தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆகியோர் 4 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கிக்கொண்டுள்ளது.மேலும், நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்றும், நடிகை கூறிய குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close