முன்பு மருத்துவர்... இப்போது ரசிகர்களின் கனவு கன்னி; இந்த நடிகை யார் தெரியுமா?

முன்பு மருத்துவராக இருந்து தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் பிரபல நடிகை குறித்து பார்க்கலாம்.

முன்பு மருத்துவராக இருந்து தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் பிரபல நடிகை குறித்து பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
aishwarya

மருத்துவம், ஃபேஷன் டிசன் போன்ற துறைகளில் வல்லமை பெற்ற பலரும் நடிகர்களாக உருவெடுத்துள்ளனர். அப்படி மருத்துவராக இருந்து தற்போது திரைத்துறையில் பிரபல நடிகை ஒருவர் கலக்கி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் மருத்துவர் என்பது இன்றும் பலருக்கு தெரியாது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இந்த நடிகை எர்ணாகுளத்தில் தனது மருத்துவ படிப்பை முடித்துள்ளார். அதே சமயம் நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தால் முதலில் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். பின்னர் விளம்பர படங்களில் நடித்து அதன்பின்னர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

அந்த நடிகை யார் என்று தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான். கடந்த  2019-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ’ஆக்ஷன்’ என்ற படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் 2021-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் நடித்தார்.

இதில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரம் ஐஸ்வர்யா லட்சுமியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெயரும், புகழும் பெற்று தந்தது. இப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா லட்சுமி மிகவும் கவனிக்கப்பட்டார். இதையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’, சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ போன்ற திரைப்படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார்.

Advertisment
Advertisements

aish

இவர் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். ஐஸ்வர்யா லட்சுமி தற்போது சாய் துர்காதேஜுக்கு ஜோடியாக ’சம்பரலா எட்டி கட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

‘அனுமான்’ பட புகழ் நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெகபதி பாபு, அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, மலையாளத்திலும் பல படங்களில் நாயகியாக கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cinema aishwarya lakshmi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: