Advertisment

ஸ்கிரிப்ட் பணியில் வேட்டையாடு விளையாடு 2 : கவுதம் மேனன் என்ன சொல்கிறார்?

தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் கமல்ஹாசன் கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தார் என்பது குறித்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
ஸ்கிரிப்ட் பணியில் வேட்டையாடு விளையாடு 2 : கவுதம் மேனன் என்ன சொல்கிறார்?

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக கமல்ஹாசனிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனர் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த 2001-ம் ஆண்டு மாதவன் அப்பாஸ் ரீமாசென் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாவர் கவுதம் மேனன். தொடர்ந்து, சூர்யாவின் காக்க காக்க படத்தை இயக்கிய அவர், கடந்த 2006-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் கமல்ஹாசன் கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருந்தார்.  ஜோதிகா நாயகியாக நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலிலும் சாதனை படைததது.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது இந்த வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் கவுதம் மேனன் பேசியுள்ளார். தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து கமல்ஹாசனிடம் விவாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகம் ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறது. லாக்டவுனுக்கு முன் கமல் சாரை சுமார் 45 நிமிடங்கள் சந்தித்து இது பற்றி விவாதித்தேன். அப்போது ஸ்கிரிப்டை டெவலப் செய்யச் சொன்னார். இப்போது கதையைச் சொல்ல எனக்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் படத்தை இயக்க முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

தற்போது கவுதம் மேனன், இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு,  ஜோஷ்வா இமை போல் காக்கா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. தற்போது விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியில் மகிழ்ச்சியாக இருக்கும் கமல்ஹாசன் அடுத்து  இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். ஷங்கர் இயக்கத்தில், சுமார் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த படம் தற்போது நடிகர்கள் மற்றும் படக்குழுவினரில் சில மாற்றங்களுடன் மீண்டும் தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Gautham Menon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment