முதல் படத்திற்கு 17 வயது: வித்தியாசமாக கொண்டாடிய ஜெனிலியா ரித்தீஷின் வீடியோ

17 ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் முதல் படத்தின் மேஜிக்கை புதுப்பித்திருக்கிறோம்.

Genelia Riteish Deshmukh donates their body organs
Genelia Riteish Deshmukh

Genelia Deshmukh celebrates 17 years of togetherness With Riteish Deshmukh: பாலிவுட்டில் கடந்த தசாப்தத்தின் ஆதர்ச தம்பதிகள் ஜெனிலியா – ரித்தீஷ் தேஷ்முக் ஜோடி. திருமணமாகி ஏழு ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் உலா வரும் இவர்கள், இளம் தம்பதிகளுக்கு நிறைய டிப்ஸும் தருகிறார்கள். ஜெனிலியாவும் ரித்தீஷும் உண்மையான, நிபந்தனையற்ற அன்பின் சரியான எடுத்துக்காட்டு. 2003-ம் ஆண்டு வெளியான ’துஜே மேரி கசம்’ மூலம் அறிமுகமான இந்த ஜோடி, தற்போது 17 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார்கள்.

பெற்றோரின் பயங்கர எதிர்ப்பை சமாளித்து காதலை வென்ற காமெடி ஜோடி!

 

View this post on Instagram

 

17 years of “Tujhe Meri Kasam”.. My first film- It has my heart quite literally @riteishd❤️

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

அவர்களின் அறிமுக திரைப்படம் ஜெனிலியா, ரித்தீஷின் காதல் கதையின் தொடக்கமும் கூட. ஆகையால் ’துஜே மேரி கசம்’ இவர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இப்படம் வெளியாகி 17 ஆண்டுகளை கடந்திருக்கும் வேளையில், ரித்தீஷ்-ஜெனெலியா 17 ஆண்டுகால அன்பையும் இது குறிக்கிறது. இந்நிலையில் தேஷ்முக் தம்பதியினர் இதை வித்தியாசமான வகையில் கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது இந்தப் படத்தின் டைட்டில் ட்ராக் பாடலை ரீ கிரியேட் செய்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார் ஜெனிலியா. “17 ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் முதல் படத்தின் மேஜிக்கை புதுப்பித்திருக்கிறோம்” என தலைப்பிட்டிருந்தார் ஜெனிலியா.

சென்னை வாசிகளுக்கு வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்

 

View this post on Instagram

 

‪17years later…. Reliving the magic of our debut film. #17YearsOfTujheMeriKasam ❤️ @Riteishd ‬

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

இதற்கிடையே, திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு பிரேக் கொடுத்திருக்கிறார் ஜெனிலியா. இருப்பினும் ’ஜெய் ஹோ, லை பாரி மற்றும் ஃபோர்ஸ் 2’ போன்ற திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்திருந்தார். மறுபுறம், டைகர் ஷெராஃப் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிக்கும் ’பாகி 3’ படத்திற்கு தயாராகி வருகிறார் ரித்தீஷ்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Genelia deshmukh riteish deshmukh tujhe meri kasam 17 years

Next Story
புத்தாண்டு நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த ‘முல்லை’ ரசிகர்கள் – வீடியோ உள்ளேpandian stores mullai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com