பாண்டிச்சேரியில் தொடங்குகிறது ஜீவாவின் ‘கொரில்லா’

ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் ‘கொரில்லா’ படத்தின் ஷூட்டிங், நாளை பாண்டிச்சேரியில் தொடங்க இருக்கிறது.

ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் ‘கொரில்லா’ படத்தின் ஷூட்டிங், நாளை பாண்டிச்சேரியில் தொடங்க இருக்கிறது.

‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி, அடுத்ததாக ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். ஜீவாவின் 29வது படம் இது. இந்தப் படத்தில், ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பன்ஸி, முக்கிய வேடத்தில் நடிக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர். ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்கிறார்.

நாளை முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஜீவாவின் புகழ்பெற்ற காமெடி வசனம் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்…’. அதற்கேற்ப பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குகின்றனர்.

பாண்டிச்சேரியில் முதல் ஷெட்யூல் முடிந்தபிறகு, இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்து காடுகளில் படமாக இருக்கிறது. பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தாய்லாந்தில் படம்பிடிக்கப்பட இருக்கிறது.

×Close
×Close