Advertisment

தனுஷ் ஹீரோயினுடன் ஜோடிபோட்ட ஜீ.வி.பிரகாஷ்

தனுஷுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்தூர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush gv prakash

தனுஷுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்தூர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Advertisment

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’. இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய இந்தப் படத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பயங்கர வசூலைக் குவித்தது இந்தப் படம்.

இதனைத் தொடர்ந்து மறுபடியும் இருவரும் ஒரு படத்தில் இணைவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படம், சிம்பு ரசிகர்களுக்கு கூட பிடிக்காத வகையில் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில், ஹீரோயினாக அமைரா தஸ்தூர் நடிக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Tamil Cinema Gv Prakash Adhik Ravichandran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment