இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ என்ற பாடலின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.
ரஹ்மானின் அக்காவும், ஜி.வி-யின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெஹானா பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து ’வெயில்’ படத்தின் மூலம் இசையமப்பாளராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராகவும் ஆனார். தற்போது பல படங்களில் நடித்து வரும் இவருக்கு, இயக்குநர் சசியின் ’சிவப்பு மஞ்சள் பச்சை’ விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஜி.வி-யின் தங்கையும் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘க.பெ.ரணசிங்கம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.
இவர் ஏற்கனவே அமலா நாகர்ஜுனாவுடன் இணைந்து 'High Priestess' என்ற வெப் சிரீஸில் நடித்திருந்தார். ஜிவி பிரகாஷிற்கு இத்தனை அழகான தங்கையா? என பவானியின் படத்திற்கு லைக் மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தவிர, ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றொரு சகோதரி மகன் ஏ.ஹெச்.காசிஃப் ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.