‘நாச்சியார்’ படத்துக்காக இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்

உன்னை விட்டா யாருமில்ல’ என்று தொடங்கும் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்காவுடன் சேர்ந்து பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

gv prakash magathana manidhargal

ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்தில், இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ், ‘நாச்சியார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன், இளையராஜா இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். ‘உன்னை விட்டா யாருமில்ல’ என்று தொடங்கும் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்காவுடன் சேர்ந்து பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். மேலும், அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘உங்கையும் எங்கையும் சேர்த்து கைரேகை மாத்துது காத்து’ என்ற வரியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ‘நாச்சியார்’ படத்தின் டீஸர் வெளியானது. அந்த டீஸரின் இறுதியில் ஜோதிகா உச்சரித்த கெட்ட வார்த்தைக்காக, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. படத்தைப் பற்றி மட்டுமல்லாமல், பாலா, ஜோதிகாவைப் பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gv prakash sung a song in illayaraja music for naachiyaar movie

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com