Advertisment

Happy Birthday Ajith: அஜித்துக்கு ஜோடியாக ரசிகர்கள் கொண்டாடும் நடிகைகள்!

Happy Birthday Ajith: அஜித்தின் ’வாலி’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்திருந்தார் ஜோதிகா.

author-image
shalini chandrasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Ajith, Thala Ajith,

Thala Ajith, Actor Ajithkumar

Happy Birthday Ajith: முதன் முரையாக ‘அமராவதி’ திரைப்படத்தில் நடிகட்ர் அஜித் முழுநீள ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் அஜித்துடன் திரும்ப திரும்ப ஜோடி சேர்ந்த நாயகிகளைப் பற்றி இங்கே பார்ப்போம்...

தேவயானி

Happy Birthday Ajith, thala ajith, devayani

முதன் முதலில் 1996-ல் வெளியான ’கல்லூரி வாசல்’ படத்தில் தான் அஜித்துடன் இணைந்து நடித்தார். ஆனால் அஜித்தை அவர் ஒருதலையாக காதலிக்கும்படி தான் இந்தப் படத்தின் கதை இருக்கும்.

பின்னர் அதே ஆண்டு வெளியான ‘காதல் கோட்டை’ மாபெரும் வெற்றி பெற்றது. நேரில் பார்க்காமல் உணர்வுகளை மட்டும் ஆத்மார்த்தமாக காதலிக்கும் காதலர்களைப் பற்றிய இந்தக் கதையில் அஜித்தும் தேவயானியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். மூன்று தேசிய விருதுகளை வென்ற இப்படம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

1999-ல் வெளியான தொடரும் படத்தில் அஜித்துக்கு பொஸஸிவ்னெஸ் மிகுந்த மனைவியாக நடித்திருப்பார் தேவயானி.

அதே 1999-ல் வெளியான ‘நீ வருவாய் என’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார் அஜித். தேவயானியை திருமணம் செய்துக் கொள்ள விரும்பிய கதாபாத்திரத்தில் சிறிது நேரமே வந்தாலும், முழுநீள கதாயகனுக்கான முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.

 

சிம்ரன்

Happy Birthday Ajith, Thala Ajith, simran

அஜித்தும் சிம்ரனும் முதன் முதலில் இணைந்து நடித்தப் படம் ‘அவள் வருவாளா’. இப்படம் 1998-ல் வெளியானது. பின்னர் 1999-ல் வாலி திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். 2000-ல் வெளியான ‘உன்னைக்கொடு என்னைத் தருவேன்’ படத்திலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருந்தார் சிம்ரன்.

ஜோதிகா

Happy Birthday Ajith, Thala Ajith, jyothika

1999-ல் அஜித்தின் ’வாலி’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்திருந்தார் ஜோதிகா. அதன் பிறகு 2000-ல் ’முகவரி’, 2001-ல் ‘பூவெல்லாம் உன் வாசம்’, 2002-ல் ‘ராஜா’ என நான்கு முறை அஜித்துடன் திரையில் தோன்றியிருக்கிறார் ஜோ.

த்ரிஷா

Happy Birthday Ajith, Thala Ajith, trisha

2005-ல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ஜீ’ திரைப்படம் தான் அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த முதல் படம்.

பிறகு, 2007-ல் ‘கிரீடம்’, 2011-ல் ‘மங்காத்தா’, 2015-ல் ‘என்னை அறிந்தால்’ ஆகியப் படங்களில் அஜித் - த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

நயன்தாரா

Happy Birthday Ajith, Thala Ajith, nayanthara

2007-ல் திரைக்கு வந்த ‘பில்லா’ திரைப்படம் தான் அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடித்த முதல் படம். 2008-ல் ‘ஏகன்’, 2013-ல் ‘ஆரம்பம்’, 2019-ல் ’விஸ்வாசம்’ ஆகியப் படங்களில் அஜித்துடன் திரையைப் பகிர்ந்திருக்கிறார் நயன்தாரா.

Tamil Cinema Ajith Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment