Advertisment

Happy Birthday Ajith: நீங்கள் இதுவரை பார்க்காத அஜித்தின் படங்கள்!

Happy Birthday Ajith: ரசிகர்கள் இவரை வெள்ளித்திரையில் மட்டுமே பார்க்க முடியும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Ajith, thala ajith birthday

திரைப்பயணத்தை தொடங்கிய காலங்களில் அஜித்.

Happy Birthday Ajith: நடிகர் அஜித் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Advertisment

Happy Birthday Ajith, Ajith Birthday

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலிப்பதற்குக் காரணம் அவரது கடின உழைப்பு தான்! இவரது திரை வாழ்க்கை வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கொண்டது. ஆனால் அவைகள் எந்த விதத்திலும் அவருடைய புகழிற்கு களங்கம் விளைவிக்கவில்லை.

Happy birthday Ajith, thala ajith

பிறந்தது ஹைதராபாத், அப்பா பாலக்காட்டு ஐயர், அம்மாவின் தாய்மொழி சிந்தி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அதனால் ஆரம்ப காலங்களில் தமிழ் பேச ரொம்பவும் கஷ்டப் பட்டார் அஜித்.

Happy Birthday Ajith, Thala Ajith

நடிப்பதை விட, ரேஸ் கார் ஓட்டுவதில் தான் அஜித்துக்கு ஆர்வம் அதிகம்.

Happy Birthday Ajith, Thala Ajith

1993-ல் அமராவதியில் நடிகரான பின்பும் கூட அவர், ரேஸ் ஆட்டோக்களை ஓட்ட மறக்கவில்லை.

Thala Ajith Birthday, Happy Birthday Ajith

சென்னை, மும்பை, டெல்லி மண்டலங்களில் ரேஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் அஜித். அதோடு சர்வதேச ரேஸ் பந்தயங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார். 2003-ல் ஃபார்முலா ஆசியா பி.எம்.டபிஸ்யூ சாம்பியன்ஷிப், 2010-ல் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ள ஒரே நடிகர் இவரே.

Thala Ajith Birthday, happy birthday ajith

இருப்பினும் விபத்தில் சிக்கிக் கொண்டதால், படங்களில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Thala Ajith Birthday, Happy birthday ajith

அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது, உடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்தார் அஜித். இந்த விஷயம் அப்போது மீடியாவில் கிசுகிசுக்களாக வெளிவந்தது.

Thala Ajith Birthday, Happy birthday ajith

இரு குடும்பத்தின் சம்மதத்துடன் 2000-ஆம் ஆண்டு ஷாலினியை கரம் பிடித்தார் அஜித்.

Thala Ajith Birthday, Happy birthday ajith

இப்போது இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

Thala Ajith Birthday, Happy birthday ajith

எப்போதுமே பொதுவெளியில் தன்னைக் காட்டிக்கொள்ள அஜித்துக்கு பிடிக்காது. அதனால் ரசிகர்கள் இவரை வெள்ளித்திரையில் மட்டுமே பார்க்க முடியும்.

Thala Ajith Birthday, Happy birthday ajith

தமிழ் சினிமா நடிகர்கள் கொஞ்சம் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாலே, அவர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிடும். ஆனால் இதிலிருந்து விலகியே இருக்கிறார் அஜித்.

Thala Ajith Birthday, Happy birthday ajith

தன்னுடைய ரசிகர் மன்றம் தவறாக செயல்படுவதை அறிந்து 40-வது பிறந்தநாளின் போது அதனை கலைத்தார்.

Thala Ajith Birthday, Happy birthday ajith

சுகாதாரம் மற்றும் குடியுரிமையை வலியுறுத்தி, அஜித்தின் பெற்றோர்கள் பெயரில் மோகினி - மணி அறக்கட்டளை நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகிறது.

Ajith Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment