ராஜா ராஜா தான்.... தலைமுறைகளை தாண்டி நிற்கும் அந்த 5 பிஜிஎம்கள்

இளையராஜா பிறந்தநாள்: ராஜாவின் இசையில் வெளிவந்த தி பெஸ்ட் 5 பிஜிஎம்க்களை பார்க்கலாமா???

இளையராஜா பிறந்தநாள்:

இசை உலகின் அரசனாக இருந்த இளையராஜாவிற்கு இன்று 75 ஆவது பிறந்த நாள். காதல், நட்பு, பிரிவு,கோபம், சண்டை, அழுகை என மனிதனின் ஒவ்வொரு உணர்வையும் இசையாலே புரிய வைத்தவர் தான் இசைஞானி இளையராஜா.

தலைமுறைகளை தாண்டி நிற்கும், ராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் எவருமே இல்லை. கதை, இயக்குனர், நடிகர், நடிகை எதுவே தெரியாமல் வெறும் இளையராஜா என்ற பெயருக்காகவும், அவரின் இசை தாலாட்டை கேட்பதற்காகவும் தியேட்டருக்கு சென்ற கூட்டங்கள் ஏராளம்.

குறிப்பாக சில படங்களில் ராஜாவின் பின்னணி இசையை கேட்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கும் என்று பலர் சொல்லி கேட்டிரூப்போம். அப்படி ராஜாவின் இசையில் வெளிவந்த தி பெஸ்ட் 5 பிஜிஎம்க்களை பார்க்கலாமா???

ஜானி:

ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த ஜானி திரைப்படம் இளையராஜாவின் மிக சிறந்த இசைப்படங்களில் ஒன்று. குறிப்பாக ஸ்ரீதேவியை ரஜினி சந்திக்கும் தருணங்களில் பின்னால் ஒலிக்கும் அந்த பின்னணி இசை எத்தனை முறை கேட்டாலும் இதயம் கொஞ்சம் கரைந்துவிடும்.

புன்னகை மன்னன்:

காதல் தோல்விக்கு தற்கொலை ஒரு தீர்வல்ல என்பதை ஆழமாக பதிவு செய்யப்பட்ட பாலசந்தரின் மற்றொரு காவியம். கமல்- ரேவதி நடனம் பயிற்சி செய்யும் போது பின்னால் ஒலிக்கும் இந்த இசைக்கு ராஜாவின் ரசிகர்கள் அனைவரும் அடிமை.

மவுன ராகம்:

மணிரத்னத்தின் மவுனத்தை தனது இசையால் உடைத்தார் இளையராஜா என்று தான் சொல்ல வேண்டும். மோகன் மற்றும் ரேவதி இடையே வரும் அந்த அதிர்வுகளை தனது இசையாலே காதுகளுக்கு விருந்து படைத்திருப்பார் ராஜா.

நாயகன்:

மணிரத்னம்-இளையராஜாவின் மற்றொரு அழகான படைப்பு. படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவே வாழ்ந்திருந்தார். இளையாராவின் குரலில் படம் முழுக்க பயணிக்கும் அந்த பாடல் இன்று வரை பலரின் காலர் ட்யூன் தான். கமல் – சரண்யாவுக்கு இடைப்பட்ட காதல் காட்சிகளில் பின்னால் ஒலிக்கும் ராஜாவினின் இசை மீண்டும் ஒருமுறை

பல்லவி அனு பல்லவி:

மணிரத்தினத்தின் முதல் படம். 1983-ல் வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். உயிரோட்டமான இசையை தந்த ராஜாவிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தன.

×Close
×Close