Advertisment

”நீங்க நல்லவரா..  இல்லை கெட்டவரா” : கலைஞன் சார் நீங்க: உலக நாயகனின் பிறந்தநாள் 

நடிகர் கமல்ஹாசன் இன்று 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நமது உலக நாயகனின் கலை பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு நடிகராக அவர் செய்திருக்கும் பணி நம்மை எப்போதுமே வியப்படைய வைக்கிறது.

author-image
WebDesk
New Update
”நீங்க நல்லவரா..  இல்லை கெட்டவரா” : கலைஞன் சார் நீங்க: உலக நாயகனின் பிறந்தநாள் 

நடிகர் கமல்ஹாசன் இன்று 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நமது உலக நாயகனின் கலை பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு நடிகராக அவர் செய்திருக்கும் பணி நம்மை எப்போதுமே வியப்படைய வைக்கிறது. வெறும் நடிகன் மட்டுமாக அவர் இருந்துவிடவில்லை. சினிமாவின் எல்லா தொழில்நுட்பத்தையும் கற்றுத் தேர்ந்தவர்.

Advertisment

அவரது எல்லா படங்களும் சூப்பர் ஹிட் ஆனது கிடையாது பல சருக்கல்களை அவர் சந்தித்திருக்கிறார். குறிப்பாக 2018ம் ஆண்டு அவர் அஜித்- விஜய் போல வசூல் குவிக்கும் படங்கள் செய்வார் என்று யாரேனும் சொல்லியிருந்தால், அவரை பார்த்து நாம் சிரித்திருப்போம். ஆனால் 2022-ம் ஆண்டு விக்ரம் படம் இந்த நிலையை மாற்றிவிட்டது.

அவர் நடித்த உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை குவிக்கவில்லை. இதில் பாபநாசம் ஒருவிதத்தில் வசூல் ஈட்டியது என்றாலும். அது ஒரு பெறும் திருப்புமுனையாக இல்லை.

விஷ்வரூபம் பாகம் 1 அளவிற்கு எந்த படங்களும் கொண்டாடப்படவில்லை. ஆனால் இன்று பரவலாக இருக்கும் ஓடிடி-யை அப்போதே அவர் அறிமுகப்படுத்த முயற்சித்தார். இதனால் பல விமர்சனங்களையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடதக்கது.

கமலின் சில படங்கள் வெளியாகும் போது கொண்டாடப்படுவதில்லை. குறிப்பாக ’அன்பே சிவம்’ படத்தை சொல்ல முடியும். இந்நிலையில் சமீபத்தில் இப்படம் திரையிடபட்டது. அபோது இந்த படத்தை 13 முறை பார்த்த ரசிகர் ஒருவர் கூறுகையில் “ இது பல படங்களுக்கு நடந்திருக்கிறது. இப்போது இந்த படம் திரையிடப்பட்டபோது, யாருமே அவரது செல்போன்களை வெளியே எடுக்கவில்லை. இது கமலுக்கு தொடர்ந்து நடக்கிறது. ” என்று கூறினார்

இந்நிலையில் கமல் கட்சி தொடங்கியதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தன. ஒரே நேரத்தில் பிக்பாஸ் போன்ற ஒரு கமெர்ஷியல் ஷோவை நடத்தி கட்சியும் நடத்துகிறார். இது அறமாக என்றெல்லாம் கமல் விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஆண்டவரே… ஆண்டவர் கண்டிக்கும் விதம் சிறப்பு என்று அதிலும் தனது தடத்தை பதித்தார் கமல்.

எந்த வேலையையும் திறம்பட செய்பவர் என்பதற்கு சிறந்த உதாரணம். தமிழகம் தொடர்பாக செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் ஒளிபரப்பட்ட காணொலிக்கு கமல்தான் குரல் கொடுத்திருந்தார். இப்படியாக ரஜினி சொல்வது போல கலைத்தாய் கமலை மட்டும் தலை மேல் தூக்கிகொண்டு செல்கிறார் என்பதாக இருக்கிறது.

குறிப்பாக விக்ரம் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பிக்பாஸ் நிகழ்வும் ஒரு காரணம் என்றுதான் கூற வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment