நடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை

happy birthday suriya: நடிகர் சூர்யா பிறந்தநாளில் திரையுலகினர் பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்

Happy Birthday Surya: நவீன உலகின் காதல் மன்னனாக வலம் வரும் நடிகர் சூர்யா இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளையொட்டி, ரசிகர் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.

ஊரே வாழ்த்து சொன்னாலும் குடும்பத்தினரின் வாழ்த்து என்றுமே ஸ்பெஷல் தான். அந்த வகையில் சூர்யாவின் மனைவி மற்றும் நடிகை ஜோதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆசை கணவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். தனது வாழ்த்தில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் புருஷா” என்று செல்லமாக கூறி, இருவரும் ஜோடியாக மேட்சிங் கலர் ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜோதிகாவை தொடர்ந்து, தந்தை சிவகுமார், தாய் லட்சுமி, தம்பி மற்றும் நடிகர் கார்த்தி மற்றும் தங்கை பிருந்தா ஆகியோர் சூர்யாவுக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து மற்ற திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தங்களுடன் இணைந்து பணிபுரிவது ஒரு நல்ல அனுபவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ், டுவிட்டரில் சூர்யாவுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கயல் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சந்திரன், வீடியோ பதிவாக வாழ்த்து கூறியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகை சிம்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு வாழ்த்து

இவர்களை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். இன்றை டுவிட்டர் டிரெண்டில் சூர்யா பிறந்தநாள் வாழ்த்து முதல் இடம் பிடித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close