Advertisment

Happy Birthday Suriya: பிரபலங்களின் வாழ்த்து மழையில் சூர்யா!

Surya happy birthday: தன்னுடன் 7 படங்களில் ஜோடியாக நடித்த ஜோதிகாவையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Suriya

நடிகர் சூர்யா பிறந்தநாள்!

Suriya Birthday Wishes: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகர்களில் சூர்யா முக்கியமானவர். அப்பா மிகப்பெரும்  நடிகராக இருந்தாலும், சொந்த உழைப்பில் முன்னேற முயற்சித்தவர். அதற்காக பல தோல்விகளையும் சந்தித்தார்.

Advertisment

இயக்குநர் வசந்த் இயக்கத்தில், மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமான சூர்யா, தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார். தன்னுடன் 7 படங்களில் ஜோடியாக நடித்த ஜோதிகாவையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சூர்யா. அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவற்றை இங்கே பார்ப்போம்...

நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என, சோனி மியூஸிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

நடிகையும், ஜோதிகாவின் சகோதரியுமான நக்மா, நடிகர் சூர்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

’நந்தா’, ‘உன்னை நினைத்து’, ‘பிதா மகன்’ ஆகியப் படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை லைலா, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஒரு சிறந்த நடிகர், ஃபெண்டாஸ்டிக் மனிதர் என இயக்குநர் செல்வராகவன் சூர்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

'காப்பான்’ பட இயக்குநர் கே.வி.ஆனந்தின் வாழ்த்து!

Tamil Cinema Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment