Advertisment

HBD Vijay: அரசியலுக்கு வரச் சொல்லும் ரசிகர்கள் - வேண்டுகோளை ஏற்பாரா விஜய்?

தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, வேலை வாய்ப்பின்மை, என்று இந்த நாடே ஊனமா இருக்குதே? இது யார் தப்பு?

author-image
shalini chandrasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
HBD Thalapathy Vijay

Happy Birthday Vijay: நடிகர் விஜய் நாளை தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனைக் கொண்டாடும் விதத்தில் விஜய் ரசிகர்கள் பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.

Advertisment

இன்று மாலை 6 மணிக்கு அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. இந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தமிழகத்தின் மற்ற இடங்களைக் காட்டிலும், மதுரையில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். விஜய்யைப் பற்றி ட்விட்டரில் டிரெண்ட் செய்வது ஒரு குழு என்றால், களத்தில் இறங்கி வேலை செய்வது வேறு குழுவாக இருக்கும். அந்த வகையில் மதுரையில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

Happy Birthday Thalapathy Vijay

அந்தப் போஸ்டர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் உள்ளன. ”உங்கள் அரசியல் பயணம் தொடங்குவதற்கு தமிழகமே தவம் கிடக்கு” என்ற வாசகத்துடன் ‘செல்லூர் தளபதி தம்பிகள் மதுரை’ என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Happy Birthday Thalapathy Vijay

”அரசியலின் ஆரம்பமும் நீங்கள் தான். அரசியல் விரும்பும் ஆண்மகனும் நீங்கள் தான்” என ‘சிவகங்கை தெற்கு மாவட்ட தலைமை’ சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தலைமை செயலக படமும் இடம்பெற்றிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

Happy Birthday Thalapathy Vijay

அடுத்து ஒரு போஸ்டரில் மாற்றுத் திறனாளி சிறுவனின் படத்தை ஓரத்தில் போட்டு, “ஊனமா பிறந்தது என் தப்பு இல்லை. தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, வேலை வாய்ப்பின்மை, என்று இந்த நாடே ஊனமா இருக்குதே? இது யார் தப்பு? மக்களை காப்பாற்ற வா தலைவா...” எனக் குறிப்பிட்டு, ’மத்திய தொகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் - மதுரை’ சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அரசியலுக்கு விஜய் வருவாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும்!

 

Actor Vijay Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment