Advertisment

வில்லன் நடிகர் வாழ்வில் நடந்த அழகிய தருணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹரிஸ் உத்தமன்

ஹரிஸ் உத்தமன்

வில்லன், அண்ணன், நண்பன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஹரிஷ் உத்தமன் திருமணம் நேற்று நடைப்பெற்றது.

Advertisment

ஹரிஸ் உத்தமன் கல்யாணம்:

தமிழ் சினிமாவில் சில முகங்களை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அவர்கள் வில்லனாக நடித்தாலும் சரி, அண்ணன், தம்பி, ஹீரோவோட நண்பனாக நடித்தாலும் சரி, அவர் மீது மட்டும் தனி கவனம் பலருக்கும் செல்லும்.

சொல்லப்போனால் சில படங்களில் ஹீரோவை விட அந்த குறிப்பிட்ட கதாபாத்திரம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்திருக்கும். இப்படி  விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களை தனது நடிப்பில் கட்டிப்போட்டவர் தான் நடிகர் ஹரிஷ் உத்தமன்.

ஜெயரம் ரவியுடன் தனி ஒருவன்,  தளபதி விஜய்யுடன் பைரவா, விஜய் சேதுபதியுடன் றெக்க,  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் டோரா என  அனைத்து படங்களில் இவரின் கதாபாத்திரம் தனித்துவமானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் அசத்தி வரும் ஹரிஷ் உத்தமனுக்கு நேற்றைய தினம் அமிர்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது.  அமிர்தா மும்பையில் மேக் அப் கலைஞராக பணியாற்றி  வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

 

publive-image

இந்நிலையில், நேற்றைய தினம் இவர்களின் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் எளிமையாக நடைப்பெற்றது.  பிரபலங்கள் அனைவரும்  இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment