Happy Birthday Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜய் இன்று தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Happy Birthday Thalapathy: விஜய்யின் ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக்! – இதையெல்லாம் கவனிச்சீங்களா?
இதனை முன்னிட்டு அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 63’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகியுள்ளன. ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி சில நிமிடங்களில் டிரெண்ட் ஆனது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு வெளியான செகண்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத வகையில் உள்ளது.
HBD Vijay: அரசியலுக்கு வரச் சொல்லும் ரசிகர்கள் – வேண்டுகோளை ஏற்பாரா விஜய்?
அப்பா – மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக முன்பே சொல்லப்பட்டது. அதனை உறுதிப் படுத்தும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இஎஉந்தது. இந்நிலையில் இரவு 12 மணிக்கு வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் நெற்றியில் குங்குமம், கழுத்தில் சிலுவையுடன் அப்பா விஜய் நிற்க, அவரை சுற்றி 3 வித வித்தியாசமான கெட்டப்களில் இளவயது விஜய் நிற்கிறார்.
Vijay 63 first look image : அர்ஜென்டினாக்கு ஒரு மாரடோனான்னா – Bigil க்கு Michael டா….
ஆக, விஜய் 4 கதாபாத்திரங்களில் நடித்துள்ளாரா? அல்லது மகன் விஜய் 3 கெட்டப்களில் வருகிறாரா என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆவலோடு உள்ளார்கள் ரசிகர்கள்!
Happy Birthday Thalapathy Vijay: இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘பிகில்’ படத்தின் 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Happy Birthday Thalapathy: தளபதி விஜய்யின் தாறு மாறான பஞ்ச் டயலாக்ஸ்!
இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம். அதோடு விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் செகண்ட் லுக் போஸ்டரில் 4 விஜய் இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தளபதி 63’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
Web Title:Hbd vijay live thalapathy bigil birthday
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினி, ’பிகில்’ போஸ்டர் நன்றாக இருக்கிறதெனக் குறிப்பிட்டு தனது வாழ்த்துகளை குழுவினருக்குத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை வாழ்த்தியிருக்கும் நடிகை ரூபா மஞ்சரி, நீங்கள் எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளர்.
நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதோடு, விஜய் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விஜய் மாஷ் அப்பையும் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.
விஜய் - அட்லீ கூட்டணியில் இதற்கு முன் வெளியான ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளரான, ஹேமா ருக்மணி, ’தளபதி விஜய்க்கு மெர்சல் பிறந்தநாள் வாழ்த்துகள்’ என வாழ்த்தியுள்ளார்!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தவருமான மோகன்லால், இன்று பிறந்தநாள் காணு விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க.ஸ்டாலினின் சகோதரருமாகிய மு.க.அழகிரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பல படங்களில் விஜய்யும் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்து நடித்துள்ளனர். பிகில் படத்திலும் இந்த காம்போ தொடர்கிறது.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெஸ்ஸேஜ் அனுப்பியிருக்கிறார். அதைக் கேட்டுவிட்டு 49 நிமிடங்களில் ‘உங்களுடைய கனிவான வாழ்த்துகளுக்கு நன்றி சார்’ என பதில் அனுப்பியிருக்கிறார் விஜய்.
விருதுநகர் மக்களவையின் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பி.மாணிக்கம் தாகூர், ‘சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்னுடைய இளைய மகன் உங்களின் தீவிர ரசிகன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விஜய்யின் ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது ஒவ்வொரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் வெளியாகும் போதும் அதனை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிடுவார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் விஜய்யை, ‘பாக்ஸ் ஆஃபிஸ் உங்களுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறது. வந்து கலக்குங்கள்’ என வாழ்த்தியுள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் பலர் விஜய்யின் ரசிகர்களாக இருக்கின்றனர். குறிப்பாக இளம் நடிகர்கள் பலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்து, அவரின் பிறந்தநாளை சாதாரண ரசிகனைப் போல் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிபிராஜ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘பிகில்’ படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரும், விஜய்யின் தீவிர ரசிகையுமான அர்ச்சனா கல்பாத்தி , விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் ‘பிகில்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவருமான கதிர், விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘வரலாற்றைப் படைக்க பிறந்தவரே’ என அவர் வாழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். இந்நிலையில் புதுச்சேரியிலுள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தனியார் பேருந்துகள் முழுவதும் விஜய்யின் படங்களால் அலங்கரித்து, இன்று முழுவதும் அதில் பயணம் செய்பவர்களுக்கு இலவசம் என்று தெரிவித்திருக்கிறார்கள். புதுச்சேரி முழுவதும் இவ்வாறான தனியார் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
நேற்று மாலை 6 மணிக்கு ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இரவு 12 மணிக்கு செகண்ட் லுக் வெளியானது. இதில் நெற்றியில் குங்குமம், கழுத்தில் சிலுவை என அப்பா விஜய் கம்பீரமாக நிற்க, அவருக்குப் பின் 3 வித்தியாச கெட்டப்களில் இளவயது விஜய் நிற்கிறார். இதனால் படத்தில் விஜய் 4 கதாபாத்திரங்களில் நடிக்கிறாரோ என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.