Advertisment

'இந்தி தான் தேசிய மொழி': கன்னட நடிகருடன் மல்லுக்கட்டிய அஜய் தேவ்கன்

Ajay Devgn responded to Kiccha Sudeep's comment on Hindi Tamil News: இந்தி நடிகர் அஜய் தேவ்கன், தனது டுவிட்டர் பதிவின் மூலம் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Hindi national language; Ajay Devgn - Kiccha Sudeep’s language war in twitter

Ajay Devgn - Kiccha Sudeep

Ajay Devgn - Kiccha Sudeep Tamil News: தென்னிந்திய மொழிகளில் தயாராகும் திரைப்படங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன. குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எ.ஃப்.-2 உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளன.

Advertisment

இந்த நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது, “இந்தி என்பது தேசிய மொழி அல்ல. பாலிவுட் திரைப்படங்களை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டாலும், சமீப காலமாக அவை வெற்றி பெறுவதில்லை. தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகின்றன” என்று தெரிவித்து இருந்தார்.

நடிகர் கிச்சா சுதீப்பின் இந்த கருத்திற்கு சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்கள் எதிர்ப்பு கருத்தை பதிவு செய்து வந்த நிலையில், இந்தி நடிகர் அஜய் தேவ்கன், தனது டுவிட்டர் பதிவின் மூலம் கிச்சா சுதீப்பின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அந்த பதிவை முழுவதும் அவர் இந்தியிலேயே பதிவிட்டும் உள்ளார்.

அந்த பதிவில் அஜய் தேவ்கன், “சகோதரரே, உங்கள் கருத்துப்படி இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் அன்றும், இன்றும், என்றும் இருக்கும். ஜன கன மன.” என்று பதிவிட்டுள்ளார்.

அஜய் தேவ்கனின் இந்த பதிவு டுவிட்டரில் வைரலாக பகிரப்பட்டு வந்த நிலையில், அந்த பதிவிற்கு பதில் அளித்த கிச்சா சுதீப், ஹேலோ, அஜய்தேவ்கன் சார்… நான் ஏன் அந்த வரியை சொன்னேன் என்பதற்கான சூழல், அது உங்களைச் சென்றடைந்ததாக நான் யூகித்த விதம் முற்றிலும் வேறுபட்டது. நான் உங்களை நேரில் பார்க்கும்போது அது குறித்து பேசுவேன். அது புண்படுத்தவோ, தூண்டிவிடவோ அல்லது விவாதத்தைத் தொடங்கவோ அல்ல. நான் ஏன் சார்.

நான் நம் நாட்டின் ஒவ்வொரு மொழியையும் நேசிக்கிறேன், மதிக்கிறேன் சார். நான் இந்த வரியை முற்றிலும் மாறுபட்ட சூழலில் கூறியது போல், இந்த தலைப்பில் இருந்து விடுபட விரும்புகிறேன். உங்களுக்கு எப்பொழுதும் எனது முழு வாழ்த்துகள். விரைவில் உங்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் பதிவு செய்த அஜய் தேவ்கன், "கிச்சா சுதீப் நீங்கள் ஒரு நல்ல நண்பர். தவறான புரிதலை நீக்கியதற்கு நன்றி. நான் எப்போதுமே சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைத்தேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், நம் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதோ பிழை இருந்திருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் பதிவு செய்த கிச்சா சுதீப், "மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கங்கள் முன்னோக்குகள். முழு விஷயமும் தெரியாமல் எதிர்வினையாற்றாமல் இருப்பதற்குக் காரணம்,,,விஷயங்கள்.:). நான் உன்னைக் குற்றம் சொல்லவில்லை அஜய்தேவ்கன் சார். ஆக்கபூர்வமான காரணத்திற்காக உங்களிடமிருந்து ஒரு ட்வீட் வந்திருந்தால் அது மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்கும்." என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Twitter Ajay Devgn Twitter Response Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment