‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ரகசிய திருமணம் : விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாதென நண்பர்களுக்கு உத்தரவு

‘இனிமேல் சிங்கிள் கிடையாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும். நன்றி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆதி.

By: November 30, 2017, 1:08:08 PM

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, திருப்பதியில் இன்று காலை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, இண்டிபெண்டண்ட் ஆல்பம் மூலம் பிரபலமானவர். ‘க்ளப்புல மப்புல’ பாடல் மூலம் பிரபலமான இவரை, தான் இயக்கிய ‘ஆம்பள’ படத்துக்கு இசையமைக்க வைத்தார் சுந்தர்.சி. அதன்பிறகு ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘கதகளி’, ‘கத்தி சண்டை’, ‘கவண்’, ‘மீசைய முறுக்கு’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது ‘இமைக்கா நொடிகள்’, ‘கலகலப்பு 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியராக இருந்த ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குநராகவும், ஹீரோவாகவும் களமிறங்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

தொடந்து, அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில், ஹாக்கி பிளேயராக அவர் நடிக்கிறார். அதற்காக, தீவிர ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தை, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், திடீரென இன்று காலையில் அவருடைய திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. திருப்பதியில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஒருசில நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் அழைப்பு இல்லை. அவ்வளவு ஏன்… தன் திருமணம் பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என நண்பர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதனால், மணப்பெண் யார், என்ன செய்கிறார் என்ற விவரங்கள் கூட தெரியவில்லை.

ஆனாலும், அவர்களுடைய திருமண புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ‘இனிமேல் சிங்கிள் கிடையாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும். நன்றி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆதி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Hip hop tamizha aadhi got married

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X