Advertisment

கோல்டன் குளோப் விருதுகள் 2019 - வென்றவர்கள் யார் யார்?

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தில் நடைபெற்ற 76வது கோல்டன் குளோப் விழாவில் 'பொஹீமியன் ராப்சடி' என்கிற திரைப்படம் அதிகப்படியாக விருதுகளை அள்ளியது

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hollywood Golden-Globes-2019-winners-list lady gaga christian bale bohemian-rhapsody

Hollywood Golden-Globes-2019-winners-list lady gaga christian bale bohemian-rhapsody

Golden Globes 2019 : ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக மிக உயரிய விருதாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த படம், இயக்குனர், நடிகர்- நடிகைகள், சிறந்த இசை, சிறந்த தொலைக்காட்சி தொடர் போன்ற பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தில் நடைபெற்ற 76வது கோல்டன் குளோப் விழாவில் 'பொஹீமியன் ராப்சடி' என்கிற திரைப்படம் அதிகப்படியாக விருதுகளை அள்ளியது. இந்த விழாவில் விருது வென்றவர்களின் முழு விவரம் இதோ!

Advertisment

திரைப்பட பிரிவு :

சிறந்த படம் - பொஹீமியன் ராப்சடி

சிறந்த படம் (இசை அல்லது நகைச்சுவை) - கிரீன் புக்

சிறந்த நடிகர் - ரமி மலெக் (பொஹீமியன் ராப்சடி)

சிறந்த நடிகை - க்ளென் க்ளோஸ் (தி வைஃப் )

சிறந்த நடிகர் (இசை அல்லது நகைச்சுவை) - கிறிஸ்டியன் பெல் (வைஸ்)

சிறந்த நடிகை (இசை அல்லது நகைச்சுவை) - ஒலிவியா கோல்மன் ( தி ஃ பேவரட்)

சிறந்த துணை நடிகர் - மஹர்ஷால அலி (கிரீன் புக்)

சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங் ( இஃப் பெலே ஸ்ட்ரீட் குட் டாக்)

சிறந்த இயக்குனர் - அல்போன்சோ குரான் (ரோமா)

சிறந்த திரைக்கதை - கிரீன் புக்

சிறந்த அனிமேஷன் - ஸ்பைடர்மேன் (இண்டூ தி ஸ்பைடர் - வெர்ஸ்)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - ரோமா

சிறந்த இசை - பஃஸ்ட் மேன் (ஜஸ்டின் ஹர்விட்ஸ் )

சிறந்த பாடல் - ஷாலோ, எ ஸ்டார் இஸ் பார்ன்

தொலைக்காட்சி பிரிவு : 

சிறந்த தொடர் - தி அமெரிக்கன்ஸ்

சிறந்த தொடர் (நகைச்சுவை) - தி காமின்ஸ்கி மெத்தெட்

சிறந்த நடிகர் - ரிச்சர்ட் மேடன் (பாடிகார்ட்)

சிறந்த நடிகை - சாண்ட்ரா ஓ (கில்லிங் ஈவ்)

சிறந்த நடிகர் (நகைச்சுவை) - மைகேல் டக்லஸ் ( தி காமின்ஸ்கி மெத்தெட்)

சிறந்த நடிகை (நகைச்சுவை) - ரச்சேல் ப்ரோஷ்நாஹான் (தி மார்வேலாஸ் மைசெல்)

சிறந்த குறுந்தொடர் - தி அசாசிநேஷன் அஃப் கியானி வேர்செஸ் : அமெரிக்கன் கிரைம் ஸ்டோரி)

சிறந்த நடிகர் (குறுந்தொடர்) - டேரன் கிரீஸ் (தி அசாசிநேஷன் அஃப் கியானி வேர்செஸ் : அமெரிக்கன் கிரைம் ஸ்டோரி)

சிறந்த நடிகை (குறுந்தொடர்) - பட்ரிஸியா (எஸ்கேப் அட் டேன்நிமோரா)

சிறந்த துணை நடிகர் (குறுந்தொடர்) - பேன் விஷா ( ஏ வெரி இங்கிலிஷ் ஸ்கேண்டல்)

சிறந்த துணை நடிகை (குறுந்தொடர்) - பட்ரிஸியா கிளார்க்சன் (ஷார்ப் ஆப்ஜெக்ட்ஸ்)

Hollywood Spiderman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment