Advertisment

கூந்தலை ஸ்கார்ஃப் ஆக மாற்றிய ஹாலிவுட் கிளாமர் லார்டே: ஃபேஷன் உலகம் ஸ்தம்பிப்பு!

பாடகி-பாடலாசிரியர் மற்றும் ஹாலிவுட் கிளாமர் என பன்முகம் கொண்ட லார்டே, நியூயார்க்கில் நடந்த குகன்ஹெய்ம் சர்வதேச காலா 2021-க்காக அணிந்திருந்த மேக்கப் ஃபேஷன் உலகில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
கூந்தலை ஸ்கார்ஃப் ஆக மாற்றிய ஹாலிவுட் கிளாமர் லார்டே: ஃபேஷன் உலகம் ஸ்தம்பிப்பு!

அழகிகள் அனைவரும் பேஷன் உலகில் தங்களின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதை உறுதி செய்கிறார்கள். அவர்களில், மற்றவர்களை விட நம்முடன் நீண்ட காலம் தங்க வேண்டியவர்கள் சிலர் உள்ளனர். லார்டே கெளச்சரும் அதில் ஒருவர்.

Advertisment

பாடகி-பாடலாசிரியர் மற்றும் ஹாலிவுட் கிளாமர் என பன்முகம் கொண்ட லார்டே இன் டியோர் கெளச்சூர் (Lorde in Dior Couture). நியூயார்க்கில் நடந்த குகன்ஹெய்ம் சர்வதேச காலா 2021 க்காக (Guggenheim International Gala 2021), லார்டே அணிந்திருந்த மேக்கப் ஃபேஷன் உலகில் வைரலாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் அவர், மரியா கிராசியா சியூரி வடிவமைத்த பிளிடட் கெளன் அணிந்திருந்தார்.

ஆனால் நிகழ்ச்சியை திருடியது, அவர் தனது கூந்தலை ஸ்கார்ஃப் போல கழுத்தை சுற்றி அணிந்த விதம் தான். வைர காதணிகள் மற்றும் சில மோதிரங்களுடன், அவரது தோற்றம் மினிமலாகவும், கிளாசிக்காவும் குறைந்த ஒப்பனையிலும் அபரிமிதமாக இருந்தது.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டியோர், அதில் ஆடைத் தயாரிப்பு குறித்து பதிவிட்டிருந்தார். அன்று மாலையில், பாடகி தனது ஃபெர்மான்ஸ்க்காக பக்கவாட்டில் விரிந்த அகன்ற கால்களுடன் மின்னும் தங்க பேன்ட்சூட்டிற்கு மாறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக டியோரால் ஏற்பாடு செய்யப்படும் காலா நிகழ்ச்சியில், பெரும்பாலான விருந்தினர்கள் பிராண்டின் படைப்புகளை அணிந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

குகன்ஹெய்ம் சர்வதேச காலா 2021, டியோர் ஆல் சாத்தியமானது. இந்த மியூசியம், மறைந்த எடெல் அட்னான், ஜென்னி சி. ஜோன்ஸ் (@jcjstudio), சிசிலியா விகுனா (@ceciliavicuna) மற்றும் கில்லியன் வேரிங் ஆகிய நான்கு கலைஞர்களை கௌரவித்தது, இவர்களின் படைப்பு நடைமுறைகள் நமது கடந்த காலத்தை ஊக்கமளித்து, எதிர்காலத்தை உற்சாகமூட்டுவதாக கூறியது.  மேலும் 18 ஆண்டுகளுக்கும் மேலாக குகன்ஹெய்ம் அறக்கட்டளையின் விலைமதிப்பற்ற தலைவர்களான ஃபிலிஸ் மற்றும் பில் மேக் ஆகியோரையும் கௌரவித்தது.

அத்துடன் மாலை நேர சிறப்பம்சமாக லார்டே இன் பாட்டு, அரங்கத்தை அவரது அழகான குரலால் நிரப்பியது”, என குகன்ஹெய்மின் இன்ஸ்டாகிராம் பதிவு கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment