Advertisment
Presenting Partner
Desktop GIF

ஐ.பி.எல் போன்று இனி பி.பி.எல் குதிரையேற்றம் போட்டிகளும் இருக்கும்: நடிகர் பிரசாந்த்

குதிரை விளையாட்டு போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தமிழனாக பெருமை படுவதாகவும் இதன் மூலம் நம்முடைய வரலாற்றை மீட்டு வருகிறோம் எனவும் .இந்த வருடம் 2024"அந்தகன் படமும் நடிகர் விஜயுடன் G.O.A.T படமும் திரைக்கு வருவது மகிழ்வு.

author-image
WebDesk
New Update
sasa

குதிரை விளையாட்டு போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தமிழனாக பெருமை படுவதாகவும் இதன் மூலம் நம்முடைய வரலாற்றை மீட்டு வருகிறோம் எனவும் .இந்த வருடம் 2024"அந்தகன் படமும் நடிகர் விஜயுடன் G.O.A.T படமும் திரைக்கு வருவது மகிழ்வு.
2026"அரசியல் களத்திற்கு என்னுடைய அரசியல் பயணம் குறித்து கூற காலம் உள்ளது - இருந்தும் மக்களுக்கு யார் நல்லது செய்கின்றாரோ அவர்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும் என நடிகர் பிரசாந்த் தெரிவிப்பு.
கோவை நவ-இந்தியாவில் நட்சத்திர உணவகத்தில் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் (PPL ) மற்றும் லோகோ அறிமுகம்  குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் (PPL ) லோகோவை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது.ஹிஸ்டரி மேக்கிங் என்று நான் சொல்லுவேன் - குதிரை விளையாட்டு மூலம் அதற்கான கட்டமைப்பு செய்து வருகிறோம். 
கிரிக்கெட்டில் ஐ.பி.எல் போன்று இனி பி.பி.எல் இருக்கும் எனவும் சாதாரண மக்களும் குதிரை ஏற்றம் போன்றவை இருக்க வேண்டும். சின்ன வயதில் இருந்து குதிரை விளையாட்டு எனக்கு பிடிக்கும். என்னுடைய படங்களிலும் குதிரைகளை கொண்டு வந்து விடுவேன். குதிரை எனக்கு பிடித்த விலங்கு. படப்பிடிப்பு போது குதிரையில் பயணித்த நிகழ்வுகளை பகிர்ந்தார்.  தமிழர்கள் ஒரு செயலை செய்யும் போது அதை ஆதரிக்க வேண்டும்.  

Advertisment

அந்தகன் ஆகஸ்ட் மாதம் வெளியீடு உள்ளது.  அந்தகனில் எல்லா விதமான பிரசாந்தை பார்க்கலாம்.அந்த கன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.
’GOAT’ படம் பண்றது காரணமாக மூன்று பேருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் மல்டி ஸ்டார் படம் செய்து உள்ளேன்.தமிழ் சினிமாவில் ஆரோக்கியமாக போட்டி நல்லது என் மீது அன்பு கொண்ட ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும். குதிரை யார் வேண்டுமானால் ஒட்டல்லாம். போலோ விளையாட்டு அப்படி கிடையாது பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும்

நல்ல கதை இருந்தால் முழு நேர காமெடி படம் செய்ய தயார். போலோ இப்போது தான் அமைகிறது விரைவில் பார்ப்பீர்கள்.அப்பா திறமையான இயக்குநர்  டெக்னாலஜி கற்றுக் கொண்டு அதை படத்தில் பயன்படுத்தியுள்ளார். 2026"அரசியல் காலம் உள்ளது என்னுடைய அரசியல் பயணம் குறித்து பயணம் அப்பறம் பேசலாம் என தெரிவித்த அவர் 

செலபரிட்டி  போலோ நடந்தால் நான் தான் அதில் கேப்டன் ஒரு படம் எல்லாருக்கும் பிடிக்கணும் என்பது இல்லை அது அவர்களின் கருத்து. கருத்து யார் வேண்டுமானல் சொல்லலாம் . 2026"தேர்தல் களத்தில் மக்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து ஆகஸ்ட் 15"ஆம் தேதி திரைக்கு வரக்கூடிய நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment