/indian-express-tamil/media/media_files/2025/10/29/vishal-actor-2025-10-29-12-43-56.jpg)
நடிகரும் இயக்குனருமான அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷால், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படத்தின் கதை தளபதி விஜயக்காக எழுதப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
நடிகர் விஷால் தனது திரைப் பயணத்தை 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் நாடகத் திரைப்படமான 'செல்லமே' மூலம் தொடங்கினார். ஆனால், அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக மாற்றிய படம் சண்டக்கோழி தான். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. நடிகர் ராஜ்கிரன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு பாட்காஸ்டில் பேசிய விஷால், இந்த படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்
அதில், உண்மையில் விஜய்க்காக எழுதப்பட்டிருந்த 'சண்டக்கோழி' திரைப்படத்தில் தன்னை நடிக்க வைக்க இயக்குநர் லிங்குசாமியை சம்மதிக்க வைக்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நினைவுகூர்ந்தார். தன் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்ததைப் பேசிய விஷால், "லிங்குசாமி எனக்கு ஒரு நெருங்கிய நண்பர். அவர் என் தந்தையுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
'செல்லமே' படத்தின் மூலம் நான் அறிமுகமான பிறகு, லிங்குசாமியிடம் ஒரு கதை இருப்பதாக கேள்விப்பட்டேன். நான் என் பைக்கை எடுத்துக்கொண்டு உடனடியாக லிங்குசாமியின் அலுவலகத்திற்குச் சென்றேன். இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன் என்று அவரிடம் சொன்னேன். ஆனால் அப்போது அப்போது எனக்கு நட்சத்திர அந்தஸ்து இல்லாததால், என்னை நடிக்க வைக்க, அவரை சம்மதிக்க வைக்க ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டேன்.
மாஸ் ஹீரோவான தளபதி விஜய்க்காக இந்தக் கதை எழுதப்பட்டது, உன்னை வைத்து எப்படி இதை எடுக்க முடியும் என்று அவர் என்னிடம் கேட்டார். ஆனால், நான் அவரிடம், 'செல்லமே' வெளியாகும் வரை பத்து நாட்கள் மட்டும் காத்திருங்கள். தயவுசெய்து அந்தப் படத்தைப் பாருங்கள். எனக்கு இந்தக் கதை மிகவும் தேவை நண்பா" என்று கூறினேன்.
நான் நடித்த முதல் படத்தை அவர் பார்த்தார், அவருக்குப் பிடித்திருந்தது. ஆனாலும், லிங்குசாமிக்கு என்னை 'சண்டக்கோழி'யில் நடிக்க வைப்பதில் இன்னும் உறுதியில்லை. முடிவெடுக்க அவர் அவகாசம் எடுத்துக்கொண்டார். என் வீட்டில் எல்லோரும், என் முதல் படம் வெற்றி பெற்ற பிறகும் ஏன் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை என்று என்னிடம் கேட்டார்கள். அதனால், நான் அவர்களிடம் இந்தக் கதைக்காக இரண்டு ஆண்டுகள் கூட காத்திருக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.
எல்லாம் சரியாக நடந்தால், இந்தப் படம் (சண்டக்கோழி) எனக்குப் பத்து படங்கள் செய்யக்கூடிய நன்மையைச் செய்யும் என்று அவர்களிடம் சொன்னேன். அப்போதுதான் லிங்குசாமி இறுதியாகச் சம்மதித்தார். அந்தத் தருணத்திலிருந்து, என் திரைப்பயணம் ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
விஷால் தற்போது தனது முதல் இயக்கத்தில், 'மகுடம்' என்ற பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தை படமாக்கி வருகிறார். கப்பல் துறைமுகங்கள் மற்றும் சட்டவிரோத கடத்தல் பின்னணியில் இந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் ரவி அரசு இயக்கவிருந்த இந்தப் படத்தை, படைப்பு சார்ந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இடையில் விஷாலே ஏற்றுக்கொண்டார். துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி ஆகியோரும் 'மகுடம்' படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us