Advertisment

அஜித்துடன் பணிபுரிந்தது பாக்கியம்.. வலிமை உலகத்தரத்தில் இருக்கும்.. ஹூமா குரேஷி!

வலிமை படம் முன்னதாக ஜனவரி 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் நாடு முழுவதும் கொரோனா அதிகரித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Huma-Qureshi

அஜித்துடன் பணிபுரிந்தது பாக்கியம்.. வலிமை உலகத்தரத்தில் இருக்கும்.. ஹூமா குரேஷி!

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தனது வரவிருக்கும் பிரம்மாண்டமான அஜித்தின் வலிமை படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார். “வலிமை, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்று ஹூமா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

Advertisment

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், வலிமை ஜனவரி 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால், தயாரிப்பாளர்கள் படத்தை ஒத்திவைத்தனர். அதன்பிறகு, படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது வலிமை’ பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஹூமாவிடம் கேட்டபோது, ​​“அஜித்துடன் பணிபுரிந்தது ஒரு விருந்தாக இருந்தது. வலிமை "ஒரு வித்தியாசமான திரைப்படம்". அதில் நானும் சில ஆக்‌ஷன் காட்சிகளை செய்துள்ளேன். எனவே நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்."

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரசிகர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்பதால், என்னால் பல விவரங்களைப் பகிர முடியாது" என்று ஹூமா சிரித்தார்.

“தினமும் நான் எழும்பும் போது, ​​எனது போனில் வலிமை அப்டேட் கேட்டு நூற்றுக்கணக்கான செய்திகள் வருகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் நான் கையெழுத்திட்டதில் இருந்தே, என் ஒவ்வொரு காலையும் இதே கேள்வியுடன்தான் தொடங்குகிறது – வலிமை எப்போது வெளியாகும்? அது பற்றிய அப்டேட் என்ன? துரதிர்ஷ்டவசமாக, என்னிடம் எந்த அப்டேட்களும் இல்லை, ”என்று காலா நடிகை கூறினார்.

இறுதியாக, வலிமை ஒரு ஸ்பெஷலான படம். ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். குறிப்பாக சண்டைக்காட்சிகள்’ உலகத்தரத்தில் இருக்கும். அஜித்துடன் பணிபுரிந்ததை பாக்கியமாக உணர்கிறேன். ரசிகர்கள் தியேட்டரில் படத்தைப் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று முடித்தார்.  

ஹுமா, அஜித் தவிர வலிமை படத்தில் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்துள்ளார். எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை (2019) படத்திற்குப் பிறகு அஜித், வினோத் மற்றும் கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது.

வலிமை தவிர, ZEE5 இன் மித்யா வெளியீட்டை ஹூமா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Valimai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment