Advertisment

அஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை: பாவம் கணேசன் பிரணிகா கனவு நிறைவேறுமா?

டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர். பின்னர் இந்திய அரசாங்கம் அதை தடை செய்த போது, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார்.

author-image
WebDesk
New Update
அஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை: பாவம் கணேசன் பிரணிகா கனவு நிறைவேறுமா?

பிரணிகா தக்‌ஷு ஒரு இணைய நட்சத்திரம், மாடல் மற்றும் நடிகை. சில தமிழ் குறும்படங்களில் நடித்தவர், பிரதாப் ஜனாவின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான கால் கிலோ காதல் என்ற குறும்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். அறம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Advertisment

டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர். பின்னர் இந்திய அரசாங்கம் அதை தடை செய்த போது, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார்.

உனக்கென்னபா யூடியூப் சேனலின் வலைத் தொடரான ஹலோவிலும், நடித்திருந்தார். இனி ஒரு காதல் செய்வோம் மற்றும் வடசேரி ஆகிய படங்களிலும் பிரணிகா நடித்துள்ளார்.

இருந்தாலும் அவருக்கு புகழைத் தேடித் தந்தது விஜய் தொலைக்காட்சி தான். பாவம் கணேசன் சீரியலில், அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அந்த சீரியலில், அவர் நேஹா கவுடாவின் தங்கையாக ஸ்ரீமதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் வினோத் பாபுவின் ஜோடியாக பங்கேற்று  காமெடியில் அசத்தினார்.

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். அதில் புடவை, தாவணி, சுடிதார், மாடர்ன் என விதவிதமான உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுகிறார். அதைப் பார்த்து ரசிகர்கள்  லைக்குகளை வாரி வழங்குகின்றனர்.

சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரணிகாவுக்கு வெள்ளித்திரையில் அஜித், விஜய் ஆகியோருடன் நடிக்க ஆசை. ஆனால் இவரின் பெற்றோருக்கு இவரை எப்படியாவது மருத்துவர் ஆக்கி பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. இதற்காக நீட் கோச்சிங் எல்லாம் சென்றவர் இப்போது நடிகையாகி சின்னத்திரையில் பிஸியாகி விட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Paavam Ganeshan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment