Advertisment

நேயர்களின் பேராதரவுடன் புதுவருடத்தை எதிர்நோக்கி ஐஇ தமிழ்!

யார் வேண்டுமானாலும் செய்திகளை கொடுக்கலாம். ஆனால், ட்ரீட்மென்ட் எப்படி இருக்கிறது என்பதே இங்கே முக்கியம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ietamil yearenders success stories 2018 - 2018ல் ஐஇ தமிழ் நேயர்களை அதிகம் கவர்ந்த செய்திகள்

ietamil yearenders success stories 2018 - 2018ல் ஐஇ தமிழ் நேயர்களை அதிகம் கவர்ந்த செய்திகள்

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நேயர்களுக்கு எங்களது கனிவான வணக்கம். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக நீங்கள் அளித்து வரும் பேராதரவு எல்லையே இல்லாதது. சிறப்பான செய்திகளுக்கும், எழுத்துகளுக்கும், கட்டுரைகளுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கும் நீங்கள், தவறுகளை சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. உங்களது இந்த ஆதரவே எங்கள் வளர்ச்சிக்கு ஒரே காரணம் என்றால் அது மிகையாகாது.

Advertisment

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் செய்திகள் மட்டுமே வாசித்து வந்த உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்கான சிறிய தொகுப்பு இது. இன்றோடு அஸ்தமனம் ஆகப்போகும் 2018ம் ஆண்டில் நமது ஐஇ தமிழ் தளத்தில், வாசகர்கள் அதிகம் விரும்பிப் படித்த செய்திகள், கட்டுரைகள் என்னவென்று உங்கள் பார்வைக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் பரவலாக என்ன மாதிரியான செய்திகளை, கட்டுரைகளை படிக்க விரும்புகிறார்கள் என்று நீங்களும் தெரிந்து கொள்ள இதுவொரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்.

ஐஇ தமிழ் தளத்தில் வாசகர்களை அதிகம் கவர்ந்த பகுதிகள்:

வணிகச் செய்திகள்

வங்கியில் எளிதாக கடன் பெறுவது எப்படி?, குறைந்த வட்டியில் எந்த வங்கியில் கடன் பெறலாம்?, வீட்டு லோனுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கி எது?, பெர்சனல் லோன் வாங்குவது எப்படி? போன்ற வணிகம் சார்ந்த நமது செய்திகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வணிகத்தைத் தவிர்த்து சராசரி மக்களின் கனவு நனவாகாது. அந்த வகையில், நமது நேயர்கள் வணிகச் செய்திகளுக்கு சிறப்பான ஆதரவு அளித்தனர்.

பொழுதுபோக்கு செய்திகள்

யார் வேண்டுமானாலும், பொழுதுபோக்கு செய்திகளை கொடுக்கலாம். ஆனால், ட்ரீட்மென்ட் எப்படி இருக்கிறது என்பதே இங்கே முக்கியம். அந்த வகையில், சினிமா, வைரல் கன்டென்ட்கள், வாழ்வியல் தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றிற்கு வாசகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, சர்கார், 2.0, படங்களுக்கு நாம் எழுதிய விமர்சனம் பெரிதளவில் பகிரப்பட்டது. தொடர்ச்சியாக கனா, சீதக்காதி உள்ளிட்ட பல படங்களின் விமர்சனத்திற்கு நல்ல ரீச் கிடைத்தது. அது மட்டுமின்றி, நடிகர் பிரஷாந்தின் Exclusive நேர்காணல், 'கலக்கப் போவது யார்?' புகழ் நாஞ்சில் விஜயனின் Exclusive நேர்காணல் ஆகியவை வாசகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகளை நமக்கு சம்பாதித்துக் கொடுத்தது.

அரசியல்

நம் வாழ்வியலோடு பிரிக்க முடியாத அங்கம் அரசியல். கண் விழித்தவுடன் பல் துலக்குவதில் இருந்து, இரவு உறங்கும் முன்பு மொபைலை அணைப்பது வரை ஒவ்வொரு செயலிலும் அரசியல் பழகுகிறோம், அரசியல் செய்கிறோம், அரசியல் பேசுகிறோம்.

அந்த வகையில், நமது அரசியல் செய்திகள், அரசியல் கட்டுரைகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நமது தளத்தில் எழுதிய கட்டுரைகள் என அரசியல் களத்திற்கு எப்போதுமே நமது தளத்தில் பேராதரவு உண்டு.

விளையாட்டு

விளையாட்டாக விளையாட்டுச் செய்திகளை கொடுக்கக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். Exclusive விளையாட்டு நேர்காணல்கள், கிரிக்கெட் Prediction வீடியோக்கள், கிரிக்கெட் Analysis வீடியோக்கள், Analysis கட்டுரைகள் போன்றவற்றிக்கு வாசகர்கள் அதிக அளவில் ஆதரவு அழிப்பது நமக்கு பெரும் உற்சாகத்தை கொடுக்கிறது.

ஐஇ தமிழ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகள்:

டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையே வேரோடு சாய்த்த கஜா புயல், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவு, 'விஸ்வாசம்' படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதியின் Exclusive நேர்காணல், ஐபிஎல் ஏலத்தில் 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின் நேர்காணல் ஆகியவை நமது ஐஇ தளத்தில் நேயர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாக அமைந்தன. அதிலும், ஏலத்திற்கு பிறகு வருண் சக்கரவர்த்தி முதன் முதலாக நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்திற்கு தான் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகம், மனிதம் சார்ந்த செய்திகள்:

இந்தப் பிரிவில் வெளியாகும் பெரும்பாலான கட்டுரைகள் வாசகர்களை பெருமளவில் கவர்ந்தது.

உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க 6 மாதம் வேலைக்காரியாக இருந்தேன்... பெண் துப்பறிவாளரின் திக் திக் அனுபவம்! 

அன்னையர் தினம்.. மகனின் சந்தோஷத்திற்காக பெண்ணாக மாறிய தந்தை!

மூன்று பிள்ளைகளின் வயிற்றை நிரப்ப பயணிகளின் பாரங்களை சுமக்கும் தியாக பெண்!

விண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி! யார் இவர்?

‘அப்பா’... மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்

6 வருட ஆராய்ச்சியில் யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை... செண்டினல்களால் 2 முறை வரவேற்கப்பட்ட மதுமாலா!

உள்ளிட்ட பல கட்டுரைகளை நேயர்கள் ரசித்து நமக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். சாதாரண கட்டுரையாக அல்லாமல், தெளிந்த பார்வையும், புரிதலோடு கூடிய விளக்கமும், ஏன்? எதனால்? எப்படி? என்ற துல்லியமான, நேர்மையான கணிப்புப் பார்வையும் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் ஐஇ தமிழ் தளத்தின் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் சென்றது என்றால் அது மிகையாகாது!

நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!.

Ietamilcom
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment